பொது செய்தி

தமிழ்நாடு

கட்சியினருடன் கலெக்டர் ஆலோசனை

Added : பிப் 21, 2021
Share
Advertisement
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் துணை ஓட்டுச்சாவடி அமைத்தல் தொடர்பாக அனைத்துக் கட்சிப் பிரதிநிகளுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் நடந்தது.திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டசபைத் தொகுதிகளுக்கும் இறுதி வாக்காளர் பட்டியல் ஜன.20 ல் வெளியிடப்பட்டது. மொத்தம் 18 லட்சத்து 73 ஆயிரத்து 438 வாக்காளர்கள் உள்ளனர்.சட்டசபை தேர்தலின்போது கொரோனா தொற்றுப் பரவாமல்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் துணை ஓட்டுச்சாவடி அமைத்தல் தொடர்பாக அனைத்துக் கட்சிப் பிரதிநிகளுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் நடந்தது.திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டசபைத் தொகுதிகளுக்கும் இறுதி வாக்காளர் பட்டியல் ஜன.20 ல் வெளியிடப்பட்டது. மொத்தம் 18 லட்சத்து 73 ஆயிரத்து 438 வாக்காளர்கள் உள்ளனர்.சட்டசபை தேர்தலின்போது கொரோனா தொற்றுப் பரவாமல் பாதுகாப்பான முறையில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் வழிமுறைகளை அளித்துள்ளது. அதன்படி 1050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிகளை இரண்டாக பிரித்து துணை ஓட்டுச் சாவடி மையம் அமைக்க வேண்டும்.திண்டுக்கல் மாவட்டத்தில் கூடுதலாக 570 துணை ஓட்டுச் சாவடிகள் என மொத்தம் 2 ஆயிரத்து 673 ஓட்டுச் சாவடிகள் அமைக்க உள்ளதாக கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார்.டி.ஆர்.ஓ.,கோவிந்தராசு, ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் கவிதா, ஆர்.டி.ஓ., காசி செல்வி, தாசில்தார் சரவணன் உட்பட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X