ஊழலுக்கு எதிரான, திறமை மிக்க நபர்களுக்கானதே அரசியல்; இதை நிரூபிக்கும் வகையில், இந்தியாவின் மெட்ரோ மனிதர்' ஸ்ரீதரனின், அரசியல் வருகை அமைந்துள்ளது,'' என, மத்திய அமைச்சர் முரளீதரன் கூறினார்.
இந்தியாவில் மெட்ரோ ரயில் திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதை, போக்குவரத்து அடிப்படைக் கட்டமைப்பாக மிகப் பெரிய அளவில் மாற்றியதற்கு அடித்தளமாக இருந்தவர், ஸ்ரீதரன். முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், மன்மோகன்சிங் உள்ளிட்ட பலராலும் இந்தியாவின் மெட்ரோ மனிதர்' என்கிற அளவுக்கு, வெகுவாக பாராட்டப்பட்ட இவர், பணி ஓய்வுக்குப் பின், சொந்த மாநிலமான கேரளாவில் வசித்து வருகிறார்.
விரைவில், அம்மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பா.ஜ., வில் சேரப் போவதாக, அவர் தெரிவித்துள்ளார்.இது குறித்து, வெளியுறவுத் துறை இணையமைச்சரும், கேரளாவைச் சேர்ந்தவருமான முரளீதரன் கூறியதாவது:
ஸ்ரீதரனின் அறிவிப்பு, மிகுந்த வரவேற்புக்குரியது. அவரது வருகை, கேரள அரசியலில் ஏற்படுத்தப்போகும், தாக்கம், பெரிய அளவில் இருக்கும்.பா.ஜ.,வைப் பொறுத்தவரையில், திறமையான, வெளிப்படைத்தன்மை மிக்க நபர்களே, அரசியலில் இருக்க வேண்டுமென விரும்புகிறது.
ஊழல் கறை படியாத நபர்களுக்கானதே அரசியல்' என்பதுதான், பா.ஜ.,வின் கொள்கை முழக்கம்.பா.ஜ.,வின் இந்த கொள்கையை நிரூபிக்கும் வகையில்தான், ஸ்ரீதரனின் அரசியல் வருகை அமைந்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது டில்லி நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE