செந்துறை: செந்துறை அருகே செங்குறிச்சி பகுதியில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தினர் கருப்புக் கொடி கட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர்.செங்குறிச்சி ஊராட்சிக்குட்பட்டது மாமரத்துப்பட்டி. மலைக் கிராமமான இங்கு பலநுாறு குடும்பங்கள் குடும்பத்தினர் வசிக்கின்றன. மா, புளி, பூ சாகுபடி செய்கின்றனர். இப்பகுதியில் கல்குவாரி அமைக்க கனிம வளத்துறையினர் அனுமதியளித்துள்ளதாக கிராமத்தினர் தெரிவித்தனர்.கல்குவாரியில் வெடி வைத்து பாறைகள் உடைத்தால் குடிருப்புகள் சேதமடைவதோடு காற்று மாசும் ஏற்படும். வெடியால் சிதறும் பாறை துகள்களால் கிராம வாசிகள் விபத்தில் சிக்கி உயிரிழக்க நேரிடும். கிராமங்களில் நிலத்தடிநீர் பாதிக்கப்படும். குவாரியில் இருந்து பரவும் துாசு அனைத்து வகை விவசாய பயிர்களின் விளைச்சலை பாதிக்கும். மலைப்பகுதியில் உள்ள அரிய வகை உயினங்கள் அழியும் அபாயம் உள்ளது என இப்பகுதியினர் புகார் தெரிவித்தனர். எனவே குவாரி அமைப்பதை மாவட்டம் நிர்வாகம் தடை செய்ய வேண்டுமென வீடுகளில் கருப்புக்கொடி கட்டியும், பொது இடத்தில் கொடியுடன் திரண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தடை செய்யாவிட்டால் அடுத்தடுத்து போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE