பொது செய்தி

தமிழ்நாடு

விவசாய கூலி தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு

Added : பிப் 21, 2021
Share
Advertisement
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பகுதியில் பெய்த மழை காரணமாக வேளாண் சாகுபடி பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதால், விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.கடந்த சில ஆண்டுகளாகவே ஒட்டன்சத்திரம் பகுதியில் மழை பொய்த்து போனதால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் 100 நாள் வேலையை நம்பி வாழ வேண்டிய நிலைக்கு

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பகுதியில் பெய்த மழை காரணமாக வேளாண் சாகுபடி பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதால், விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.கடந்த சில ஆண்டுகளாகவே ஒட்டன்சத்திரம் பகுதியில் மழை பொய்த்து போனதால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் 100 நாள் வேலையை நம்பி வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.இந்நிலையில் கடந்த மாதம் வரை தொடர் மழை பெய்தது. இதனால் முக்கிய குளங்கள் நிரம்பி உள்ளன. இதனை பயன்படுத்தி விவசாயிகள் வேளாண் பணிகளை செய்து வருகின்றனர். தானிய வகைகள் மற்றும் காய்கறி வகைகள் நடவு செய்யும் பணியும், சில இடங்களில் களை எடுக்கும் பணியும் நடந்து வருகின்றன.மேலும் 100 நாள் வேலையும் நடந்து வருவதால் பலர் அப்பணிக்கு சென்று விடுகின்றனர். விவசாய கூலி தொழிலாளர்கள் வேறு வேலைக்கு சென்றுவிட்டதால் மிகவும் குறைவான அளவே உள்ளனர். விவசாய பணிகள் ஒரே நேரத்தில் நடப்பதால் அதிகளவு தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். இதனால் தட்டுப்பாடு தொடர்வதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X