பட்டிவீரன்பட்டி: அய்யம்பாளையம் மருதாநதி பிரதான கால்வாயில் தண்ணீர் நிறம் மாறியதால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.மருதாநதி அணையிலிருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அணை மற்றும் கால்வாயில் சித்தரேவு ஊராட்சி, அய்யம்பாளையம், சேவுகம்பட்டி பேரூராட்சிகளுக்கு குடிநீர் கிணறுகள் உள்ளன. இவற்றின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.இக்கால்வாயில் வருகிற தண்ணீர் நிறம் திடீரென பச்சை கலராக இருந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்து பேரூராட்சியில் புகார் செய்தனர். பேரூராட்சி பணியாளர்கள் தண்ணீரை ஆய்வு செய்வதற்காக மதுரைக்கு அனுப்பி உள்ளனர்.அய்யம்பாளையத்தைச் சேர்ந்த ராமன் கூறுகையில், ''அணையில் மீன் வளர்க்க குத்தகைக்கு விட்டுள்ளனர். மீன்கள் வளர இரவில் கழிவுகளை அணையில் கொட்டுகின்றனர். இதனால் நிறம் மாறியிருக்கலாம். அணைப்பகுதியில் இரவில் மின் விளக்குகள் எரியாததால் என்ன நடக்கிறது என்றே தெரிவதில்லை. இரவுக் காவலரை நியமிக்க வேண்டும்'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE