தேனி மாவட்டத்தில் சில நாட்களாக பனியின் தாக்கம் குறைந்து சில இடங்களில் அவ்வப்போது மேகமூட்டமாக சீதோஷ்ணநிலை நிலவுகிறது. இருந்த போதும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியுள்ளது.
இதனால் வனப்பகுதியில் வறட்சி ஆரம்பமாகியுள்ளது. மேகமலை புலிகள் சரணாலயப் பகுதியில் மான்கள், சிறுத்தைகள், யானை, காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன. அங்கு ைஹவேவிஸ், மணலாறு, இரவங்கலாறு அணைகள் இருந்த போதும் மனிதர்கள் நடமாட்டம் இருப்பதால் அவை தண்ணீர் அருந்துவதில் இடையூறுகள் ஏற்படும். தேக்கடி வனப்பகுதி நீண்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளை கொண்டது. எனவே மேகமலை பகுதியில் உள்ள பெரும்பாலான வனவிலங்குகள் தண்ணீர் தேடி தேக்கடி ஏரியை நோக்கி செல்லத்துவங்கியுள்ளன.
வனத்துறையினர் கூறுகையில் , வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தண்ணீர் இருக்கும் இடம்தேடி வனவிலங்குகள் செல்வது வழக்கம். யானைகள் மற்றும் புலிகள் இடம் பெயரும். யானைகளுக்கு வண்ணாத்திபாறை வனப்பகுதியில் வனத்துறை சார்பில் தொட்டிகள் அமைக்கப்பட்டு தண்ணீர் நிரப்பும் பணிகள் துவங்கியுள்ளது.மான்கள், காட்டுப்பன்றிகள் வனப்பகுதியில் நீரூற்று கண்டறிந்து அங்கு சென்று தாகத்தை தீர்த்துக் கொள்ளும் ,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE