பொது செய்தி

தமிழ்நாடு

சின்னமனுார் வாரச்சந்தையில்அடிப்படை வசதிகள் 'ஆப்சென்ட்'

Added : பிப் 21, 2021
Share
Advertisement
சின்னமனுார்: சின்னமனுார் வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லாததால் வியாபாரிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.வியாழக்கிழமை கூடும் இந்த வாரச்சந்தையில் சுற்றியுள்ள 50 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள், மேகமலை பகுதிமலை கிராம மக்கள் பலசரக்கு, காய்கறிகள் மற்றும் இதர பொருள்களை வாங்கி செல்வார்கள். இங்கு வரும் பொதுமக்களின் கூட்டமும், வியாபாரிகளின்

சின்னமனுார்: சின்னமனுார் வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லாததால் வியாபாரிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.வியாழக்கிழமை கூடும் இந்த வாரச்சந்தையில் சுற்றியுள்ள 50 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள், மேகமலை பகுதிமலை கிராம மக்கள் பலசரக்கு, காய்கறிகள் மற்றும் இதர பொருள்களை வாங்கி செல்வார்கள். இங்கு வரும் பொதுமக்களின் கூட்டமும், வியாபாரிகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும். ஆனால் குடிநீர், பொருள் வைப்பறை, கழிப்பறை என எந்த அடிப்படை வசதியும் இங்கு கிடையாது. வேறு பயன்பாட்டிற்கு கட்டடங்கள் கட்டி வாரச்சந்தை இடத்தை குறைத்தும் விட்டனர். வருவாயை அள்ளித்தரும் வாரச்சந்தைக்கு தேவையான வசதிகள் செய்து தர சின்னமனுார் நகராட்சி முன்வர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X