சணல் பொருட்கள் தயாரிக்க தேனியில் இலவச பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சணல் பொருட்கள் தயாரிக்க தேனியில் இலவச பயிற்சி

Added : பிப் 21, 2021
Share
தேனி: தேனி தாலுகா அலுவலகம் எதிரில் கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம் இயங்குகிறது. இங்கு சணல் பை தயாரிப்பதற்கான இலவச பயிற்சி பிப். 24 முதல் துவங்குகிறது. 18 வயது நிரம்பிய வேலை இல்லாத கிராமப்புற பெண்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி, உணவு இலவசம். தினமும் காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை 13 நாட்கள் பயிற்சி நடைபெறும். தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ், தொழில் துவங்க தேவையான

தேனி: தேனி தாலுகா அலுவலகம் எதிரில் கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம் இயங்குகிறது. இங்கு சணல் பை தயாரிப்பதற்கான இலவச பயிற்சி பிப். 24 முதல் துவங்குகிறது. 18 வயது நிரம்பிய வேலை இல்லாத கிராமப்புற பெண்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி, உணவு இலவசம். தினமும் காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை 13 நாட்கள் பயிற்சி நடைபெறும். தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ், தொழில் துவங்க தேவையான வங்கிக்கடன் பெறுவதற்கான ஆலோசனை வழங்கப்படும். விரும்புவோர் தங்களது புகைப்படம், ஆதார் அட்டை நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன் பிப்., 24க்கு முன் நேரில் முன்பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு 88703 76796 என்ற அலைபேசி எண்ணில் தொட்பு கொள்ளலாம் என, பயிற்சி மையத்தின் இயக்குனர் தனசேகரப் பெருமாள் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X