தேனி: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஒன்றியத்தின் இணைப்புச் சங்கமான தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை காப்பாளர் - ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் மறறும் கள்ளர் சீரமைப்புத்துறை ஆசிரியர்கள் சங்கங்களின் இணைப்பு விழா தேனி கர்னல் ஜான் பென்னி குவிக் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. மாநிலத்தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். அமைப்புச் செயலாளர் ரகுநாத் வரவேற்றார்.கள்ளர் சீரமைப்புத்துறை மாவட்டத் தலைவர் குபேந்திரச் செல்வன், காப்பாளர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டப் பொதுச் செயலாளர் குமார், தீர்மானங்களை விளக்கினார். அரசு ஊழியர்கள் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் சண்முகராஜன், நிறுவனத்தலைவர் மணி பேசினர். மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் முன் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. நிர்வாகி ரவிச்சந்திரன் நன்றி தெரிவித்தார். அரசு விடுதி மாணவர்களின் உணவுத் தொகை அரசு உயர்த்தி வழங்கியது, துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கியதற்காகவும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE