பெரியகுளம் - பெரியகுளம் வைத்தியநாதபுரம் ரேஷன் கடையின் முன்புறம் சாக்கடை உடைந்து சுகாதாரக்கேடு நிலவுகிறது. தேங்கியுள்ள சேற்றில் பொதுமக்கள் விழுந்து காயமடைகின்றனர். சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெரியகுளம் கீழவடகரை வைத்தியநாதபுரம் 1வது வார்டில் இரண்டு ரேஷன் கடை உள்ளன. நுாற்றுக்கணக்கான கார்டுதாரர்கள் இவற்றில் அரிசி, சர்க்கரை உட்படஉணவுப்பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்த கடகைளின் முன் 500 மீட்டருக்கு ரோடு இல்லாததால் அந்தப்பகுதியில் சாக்கடை உடைந்து கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. வரிசையில் காத்திருக்கும்போது கொசுக்கடியால் மக்கள் அவதிப்படுகின்றனர். வயதானவர்கள், மூடைகளை சுமந்து செல்லும் பணியாளர்கள் அடிக்கடி சேற்றில் வழுக்கி விழுந்து காயமடையும் நிலை உள்ளது. இப்பகுதியை துாய்மைப்படுத்தி பேவர் பிளாக் கற்கள் அமைக்க வைத்தியநாதபுரம் தொடக்க வேளாண்மை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE