தேனி - புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஓய்வூதியர்களுக்கு வருமான வரி பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும், அனைத்து மருத்துவ செலவினத் தொகைகளையும் காப்பீட்டு நிறுவனங்களே ஏற்க வழிவகை செய்திட வேண்டும், 60 வயதுக்கு பின் கூடுதல் ஓய்வூதியமாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை 5 சதவீதம் உயர்த்தி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற பள்ளி, கல்லுாரி ஆசிரியர் நலச்சங்கத்தினர் சார்பில் தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்டத்தலைவர் பாலுச்சாமி தலைமை வகித்தார். செயலாளர் ஆண்டவர் துவக்கி வைத்தார். முன்னாள் மாநிலத் தலைவர் பொன்னையா முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் சவுகத் அலி, பாண்டி, தேனி மாவட்ட இணைச் செயலாளர் மணி, தமிழ்நாடு மின்துறை அலுவலர்கள் சங்கத் தலைவர் பெருமாள்சாமி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கத் தலைவர் பாலையா, தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பின் தலைவர் ராமமூர்த்தி பேசினர். போடி வட்டாரச் செயலாளர் நாகராஜ் நன்றி தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE