தேனி - பெட்ரோல், - டீசல், காஸ் விலை ஏற்றத்தை கண்டித்தும், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் பழனிச்செட்டிபட்டி பஸ் ஸ்டாப் முதல் பூதிப்புரம் பிரிவு வரை கண்டன பாதயாத்திரை நடந்தது. மாவட்டத் தலைவர் முருகேசன் துவக்கி வைத்தார். மாவட்டப் பொருளாளர் பாலசுப்பிரமணியன், தேனி ஒன்றிய துணைத் தலைவர் முருகன் முன்னிலை வகித்தனர்.பூதிப்புரம் விலக்கு அருகே முடிந்த பாதயாத்திரைக்கு பின் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் தலைமை வகித்தார். தேனி நகரத் தலைவர் முனியாண்டி வரவேற்றார். துணைத் தலைவர் சன்னாசி ஒருங்கிணைத்தார். துணைத் தலைவர்கள் கருப்பசாமி, குருசாமி, தேனி வட்டாரத் தலைவர் முருகன், நகரத் தலைவர்கள் முசாக்மந்திரி(போடி) , ஜெயப்பிரகாஷ்(கூடலுார்) , ராமசுப்பு(பெரியகுளம்) , மாவட்ட மகளிரணித் தலைவர் கிருஷ்வேணி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் தர்மர், கோபால் ஆகியோர் பேசினர். ஏராளமானோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE