தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவருக்கு நிர்வாகிகள் விரைவில் நியமனம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவருக்கு நிர்வாகிகள் விரைவில் நியமனம்

Added : பிப் 21, 2021
Share
தேனி - மாற்றுத்திறனாளிகள், கொரோனாவால் பாதிக்கப்பட்ட வாக்காளர்களை கண்டறிய தி.மு.க.,வில் ஓட்டுச்சாவடி முகவர் நிலை - 2' என்ற புதிய பணியிடத்தில் நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர்,'' என, தேனிவடக்கு மாவட்டச்செயலாளர் தங்கத்தமிழ்செல்வன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நீதிமன்றத்தில் வாதாடி, ஓட்டுச்சாவடி முகவர் நிலை - 2' என்ற புதிய பணியிடத்தில்

தேனி - மாற்றுத்திறனாளிகள், கொரோனாவால் பாதிக்கப்பட்ட வாக்காளர்களை கண்டறிய தி.மு.க.,வில் ஓட்டுச்சாவடி முகவர் நிலை - 2' என்ற புதிய பணியிடத்தில் நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர்,'' என, தேனிவடக்கு மாவட்டச்செயலாளர் தங்கத்தமிழ்செல்வன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நீதிமன்றத்தில் வாதாடி, ஓட்டுச்சாவடி முகவர் நிலை - 2' என்ற புதிய பணியிடத்தில் முகவர்கள் பணியாற்ற ஒப்புதல் பெற்றுத்தந்துள்ளார். இப்பணியானது 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர், தபால் முறையில் தங்களது ஓட்டுக்களை பதிவு செய்ய உரிமை உள்ளவர்களை கண்டறிவது ஆகும். இதில் நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான ஆய்வு பெரியகுளம் (தனி), போடி சட்டசபை தொகுதிகளில் நடத்தப்பட்டது, ''என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X