சென்னை:'மெட்ரோ ரயில் கட்டணக் குறைப்பு, நாளை முதல் அமலுக்கு வருகிறது' என, முதல்வர் பழனிசாமி., தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை
:தமிழக அரசு, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை, மிகுந்த முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் முதல் கட்ட பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, பல்வேறு வழித்தட பகுதிகளில், 54.15 கி.மீ., துாரத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது.
அடுத்து, 118.90 கி.மீ.,க்கு, சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிக்கு, அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 2015 ஜூன் 29ல் இருந்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பயணியர் சேவையை துவக்கியது.ஐந்து ஆண்டுகள் மெட்ரோ சேவையை வெற்றிகரமாக முடித்து, ஆறாம் ஆண்டில், தன் சேவையை தொடர்கிறது. இதுவரை, 7.25 கோடி பயணியர், மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி உள்ளனர்.
மெட்ரோ ரயில் சேவையை, பெருவாரியான மக்கள் பயன்படுத்தும் வகையில், அதன் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதை ஏற்று, சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.அதன்படி, க்யூ ஆர் கோடு, சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தின், 'ஸ்மார்ட் கார்டு' வழியே பயணிப்போருக்கு, அனைத்து பயணச்சீட்டுகளுக்கும், அடிப்படை கட்டணத்தில் இருந்து, 20 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும்.
ஒரு நாள் வரையறுக்கப்படாத மெட்ரோ பயண திட்டத்தில், தற்போது, 45 கி.மீ., வழித்தட பகுதிகளுக்கான கட்டணம், 100 ரூபாய். இனி, புதிதாக துவக்கப்பட்டுள்ள வண்ணாரப்பேட்டை முதல், விம்கோ நகர் வரையிலான, 9 கி.மீ., நீள கூடுதல் வழித்தடத்திற்கும் சேர்த்து, 54 கி.மீ., வழித்தடத்திற்கு, அதே 100 ரூபாய் தான் கட்டணம்.
ஒரு மாதம் வரையறுக்கப்படாத மெட்ரோ பயண திட்டத்தில், தற்போது, 45 கி.மீ., வழித்தடத்திற்கு, 2,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இனி, 54 கி.மீ., வழித்தடத்திற்கும், இதே கட்டணம் தான்.ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில், கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். இந்த புதிய கட்டணம், பிப்., 22ம் தேதி முதல், அமலுக்கு வருகிறது.இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
மெட்ரோ கட்டணம் குறைப்பு விபரம்
தற்போதைய கட்டணம் புதிய கட்டணம்0-2 கி.மீ., வரை கட்டணம் ரூ.10 /மாற்றமல்லை
2-4 கி.மீ., வரை கட்டணம் ரூ.20/2 - 5 கி.மீ., வரை கட்டணம் ரூ.20
4 - 6 கி.மீ., வரை கட்டணம் ரூ.30 6 - 12 கி.மீ., வரை கட்டணம் ரூ.40/ 5-12 கி,மீ, வரை கட்டணம் ரூ.30
12 - 18 கி.மீ., வரை கட்டணம் ரூ.50/ 12 - 21 கி.மீ., வரை கட்டணம் ரூ.40
18 - 24 கி.மீ., வரை கட்டணம் ரூ.60 24 கி.மீ.,க்கு மேல் கட்டணம் ரூ.70/ 21 - 32 கி.மீ., வரை கட்டணம் ரூ.50
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE