சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 1 மாணவி தற்கொலை ஏன்?

Added : பிப் 21, 2021
Share
Advertisement
மாங்காடு: மாங்காடில், பிளஸ் 1 மாணவி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மாங்காடு அடுத்த பட்டூரைச் சேர்ந்தவர் சூர்யா, 37; பூந்தமல்லியில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். அவரது மகள் கோவர்தினி, 16.பூந்தமல்லியில் உள்ள அரசு பள்ளியில், பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று முன்தினம் பணிக்கு சென்ற சூர்யா, இரவு திரும்பி வந்தபோது, வீட்டின் கதவு,

மாங்காடு: மாங்காடில், பிளஸ் 1 மாணவி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மாங்காடு அடுத்த பட்டூரைச் சேர்ந்தவர் சூர்யா, 37; பூந்தமல்லியில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். அவரது மகள் கோவர்தினி, 16.பூந்தமல்லியில் உள்ள அரசு பள்ளியில், பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று முன்தினம் பணிக்கு சென்ற சூர்யா, இரவு திரும்பி வந்தபோது, வீட்டின் கதவு, உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது.ஜன்னல் வழியாக பார்த்தபோது, கோவர்தினி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. போலீசார், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.விசாரணையில், சூர்யாவின் கணவர், சில ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்றுவிட்டார். தாயின் பராமரிப்பில் இருந்த கோவர்தினி, நண்பர்களுடன் வெளியே சென்று வந்ததாகவும், அதை தாய் கண்டித்தாகவும் கூறப்படுகிறது.மேலும், அவர்களிடம், உறவினர்கள் பேசாமல் இருந்ததாகவும் தெரிகிறது. இதன் காரணமாக, கோவர்தினி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. மாங்காடு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X