புதுச்சேரி : புதுச்சேரியில் பல்வேறு திட்ட பணிகளை துவக்கி வைக்க வரும் 25ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி வருகிறார் என மத்திய பார்லிமெண்ட் விவகாரங்கள் துறை அமைச்சர் அர்ஜூன்ராம்மெக்வால் கூறினார்.
அளித்த பேட்டி:புதுச்சேரிக்கு 25ம் தேதி வரும் பிரதமர் நரேந்திரமோடி, அரசு விழா மற்றும் பா.ஜ., பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.ஜிப்மரில் காலை 11:30 மணிக்கு நடக்கும் விழாவில் பங்கேற்று, காரைக்காலில் ரூ. 490 கோடியில் கட்டிய ஜிப்மர் கிளை மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.சாகர்மாலா திட்டத்தில் ரூ. 18 கோடி மதிப்பில் புதுச்சேரியில் சிறிய துறைமுகம் மேம்பாடு உட்பட பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, திறந்து வைக்கிறார்.இந்த விழாக்களில் பிரதமர் 45 நிமிடம் பங்கேற்கிறார். பின்னர், ஏ.எப்.டி., மில் திடலில் நடக்கும் பா.ஜ., பொதுக் கூட்டத்தில், 45 நிமிடம் உரையாற்றுகிறார்.
கடந்த 5 ஆண்டு காங்., ஆட்சியில், புதுச்சேரிக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. மத்திய அரசுடன் இணைக்கமாக இல்லாததால் மத்திய திட்டங்கள் புதுச்சேரியில் நிறைவேற்ற வில்லை.கடந்த 2018ம் ஆண்டு பட்டா வழங்கப்பட்டும், நிலம் கிடைக்கவில்லை. புதுச்சேரியில் முதலில் பட்டா பேப்பர் தருகின்றனர். ஆனால், நிலத்தை கண்டறியவில்லை.முதல்வர் நாராயணசாமி, சோனியா, ராகுலை திருப்திப்படுத்தும் வேலையை செய்கிறார். இன்று வரை சுனாமியால் பாதித்தவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை.காங்., அரசு ஊழல் செய்வதிலும், மோதல் போக்கில் ஈடுபடுவதிலும் தான் கவனம் செலுத்தியது. ராகுலை ஏமாற்றிய நாராயணசாமி, புதுச்சேரி மக்களையும் ஏமாற்றி வருகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் நம்பிக்கை ஓட்டெடுப்பில் காங்., அரசு ஆட்சியை இழந்தால், பா.ஜ., தலைமையில் ஆட்சி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு, தேர்தலுக்கு பிறகு, பா.ஜ., ஆட்சி அமைப்பது உறுதி என்றார்.பா.ஜ. மேலிட பொறுப்பாளர் ராஜிவ்சந்திரசேகர், மாநில தலைவர் சாமிநாதன் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE