மனைவி, மகன் பிரிவு தாங்காமல் டெயலர் தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி, மகன் பிரிவு தாங்காமல் டெயலர் தற்கொலை

Added : பிப் 21, 2021
Share
அமைந்தகரை: மனைவி, மகன் பிரிந்து சென்றதால், டெய்லர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அமைந்தகரை, எம்.எம்.காலனியைச் சேர்ந்தவர் வீரராகவன், 47; டெய்லர். இவரது மனைவி திலகவதி, 43. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.மதுவுக்கு அடிமையான வீரராகவன், தினமும் குடித்து, மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இதனால், திலகவதி தனது மகனுடன், நங்கநல்லுாரில் உள்ள, தாய் வீட்டிற்கு சென்றார். இதனால், மன

அமைந்தகரை: மனைவி, மகன் பிரிந்து சென்றதால், டெய்லர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அமைந்தகரை, எம்.எம்.காலனியைச் சேர்ந்தவர் வீரராகவன், 47; டெய்லர். இவரது மனைவி திலகவதி, 43. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.மதுவுக்கு அடிமையான வீரராகவன், தினமும் குடித்து, மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இதனால், திலகவதி தனது மகனுடன், நங்கநல்லுாரில் உள்ள, தாய் வீட்டிற்கு சென்றார். இதனால், மன உளைச்சலில் இருந்த வீரராகவன், வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடல் மீது ஊற்றி தீக்குளித்தார். இதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.அமைந்தகரை போலீசார் அவரது உடலை மீட்டு, கீப்ழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X