ரவுடி கொலை வழக்கில் சிக்கிய ஆறு பேர் சிறையில் அடைப்பு

Added : பிப் 21, 2021
Share
Advertisement
வில்லியனுார், : வில்லியனுார் ரவுடி படுகொலையில் போலீசாரிடம் சிக்கிய ஆறு பேரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். புதுச்சேரி உருளையன் பேட்டை கொசப்பாளையத்தை சேர்ந்த வெங்கடேசன் - கீதா தம்பதியரின் மகன் மதன், 22; பைக் மெக்கானிக்கான இவர் கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே வந்தவர். சில ஆண்களுக்கு முன் வில்லியனுார் அடுத்த வி.மணவெளி மூகாம்பிகை நகரில் வீடுகட்டி

வில்லியனுார், : வில்லியனுார் ரவுடி படுகொலையில் போலீசாரிடம் சிக்கிய ஆறு பேரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி உருளையன் பேட்டை கொசப்பாளையத்தை சேர்ந்த வெங்கடேசன் - கீதா தம்பதியரின் மகன் மதன், 22; பைக் மெக்கானிக்கான இவர் கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே வந்தவர். சில ஆண்களுக்கு முன் வில்லியனுார் அடுத்த வி.மணவெளி மூகாம்பிகை நகரில் வீடுகட்டி வசித்து வருகின்றார்.கடந்த 17 ம் தேதி இரவு 8 மணியளவில் ஆரியப்பாளையம் சாராய ஆலை அருகே பைக்கில் சென்ற போது, மர்ம கும்பல் அவரை கொலை செய்து தப்பியது.

எஸ்.பி., ரங்கநாதன் தலைமையில் வில்லியனுார் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு பதிந்து குற்றவாளி களை தேடினர்.கொலையில் தொடர்புடைய ஒதியம்பட்டு கே.வி.நகர் வேலு (எ)வேல்முருகன், 23; உத்திர வாகினிப் பேட்டை ரவீந்திரன், 22; புருேஷாத்தமன், 21; நாவரசன், 21; ஆகாஷ், 21; கபிலன், 22; ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.விசாரணையில், சில தினங்களாக உத்திரவாகினிப்பேட் மற்றும் கேவி நகர் பகுதியில் மதன் பைக்கில் அதிவேகமாக சென்றார். இதை வேலு தரப்பினர் தட்டிக் கேட்டனர். அப்போது, மதன், ஆத்திர மடைந்து கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் முந்திக் கொண்டு, மதனை கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

வழக்கில் தொடர்புடைய கட்ட விஜி, வீரா உள்ளிட்ட சிலரை தேடி வருகின்றனர்.சம்பவம் தொடரும்மதன் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட அவரது நண்பர்கள், மதனின் உடல் மீது 'பதில் சம்பவம் தொடரும்' என்று எழுதப்பட்ட வெள்ளை துணியால் போர்த்தி இருந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவிவருகிறது.இதனால் போலீசாருக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X