பொது செய்தி

இந்தியா

கவர்னர் மாளிகை அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம்? 

Added : பிப் 21, 2021
Share
Advertisement
புதுச்சேரி : கவர்னர் மாளிகையில் பணியாற்றும் அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்யப்பட்டதாக பரவிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி கவர்னர் பதவியில் இருந்து கிரண்பேடி நீக்கப்பட்டு, தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜனிடம், கூடுதலாக பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர், கடந்த 18ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.இந்நிலையில், கவர்னர் மாளிகையில் முக்கிய

புதுச்சேரி : கவர்னர் மாளிகையில் பணியாற்றும் அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்யப்பட்டதாக பரவிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி கவர்னர் பதவியில் இருந்து கிரண்பேடி நீக்கப்பட்டு, தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜனிடம், கூடுதலாக பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர், கடந்த 18ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.இந்நிலையில், கவர்னர் மாளிகையில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றும் அதிகாரிகள் ஒட்டு மொத்தமாக இடமாற்றம் செய்யப்பட்டு, அந்த பதவிகளுக்கு வேறு அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளதாகவும், இதை பரிசீலித்து விரைவில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

அதிகாரிகளின் பெயர் பட்டியலுடன் 'வாட்ஸ் ஆப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நேற்று தகவல் பரவியது. இதனால், பரபரப்பு ஏற்பட்டது.கவர்னர் மாளிகை அதிகாரிகள் கூறும்போது, 'அதிகாரிகளை மாற்றும் கோப்பு எதுவும் கவர்னர் மாளிகையில் தயார் செய்யவில்லை. சமூக வலைதளங்களில் பரவும் தகவல், ஆவணம் தவறானது'என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X