கோயம்பேடு: கோயம்பேடு மார்க்கெட்டில், 'பைக்' திருட்டில் ஈடுபட்ட நபரை, கைது செய்த போலீசார், 23 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.கோயம்பேடு காவல் நிலைய எல்லையில், சாலையோரம் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி திருடு போவதாக புகார்கள் வந்தன. இது குறித்து, கோயம்பேடு போலீசார், தனிப்படை அமைத்து விசாரித்தனர். சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளில் பதிவான உருவத்தை வைத்து, தீவிரமாக விசாரித்து வந்தனர்.இதில், இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர், வேலுார் மாவட்டம், ஆம்பூர் தாலுகாவைச் சேர்ந்த யுவராஜ், 32, என, தெரிய வந்தது.இதையடுத்து, ஆம்பூர் சென்ற தனிப்படை போலீசார், யுவராஜை கைது செய்து விசாரித்தனர். இதில், கோயம்பேடு மார்க்கெட்டில், இரு சக்கர வாகனத்தில் வரும் வியாபாரிகள் மற்றும் நுகர்வோர்களின் பைக்கை திருடியது தெரிய வந்தது.திருடிய இரு சக்கர வாகனத்தை, ஆம்பூர் வரை ஓட்டிச் சென்று, அந்த பகுதி பதிவு எண் கொண்ட நம்பரை பொருத்தி, அப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது.யுவராஜை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து, 23 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE