சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மறுமணம் செய்வதாக ரூ 10 லட்சம் மோசடி செய்தவர் கைது

Added : பிப் 21, 2021
Share
Advertisement
சைதாப்பேட்டை: மறுமணம் செய்வதாக கூறி, பெண்ணிடம், 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை, போலீசார் கைது செய்தனர்.சைதாப்பேட்டையைச் சேர்ந்த, 40 வயது பெண், ஒன்பது மாதங்களுக்கு முன், கணவனை விவகாரத்து செய்தார். பின், மறுமணம் செய்ய, திருமண வலை தளத்தில் விண்ணப்பித்தார்.ஆந்திர மாநிலம், சித்துாரைச் சேர்ந்த மனோகரன், 45, என்பவர் தொடர்பு கொண்டு, மறுமணம் செய்ய சம்மதித்துள்ளார். இருவரும், பழகி

சைதாப்பேட்டை: மறுமணம் செய்வதாக கூறி, பெண்ணிடம், 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை, போலீசார் கைது செய்தனர்.சைதாப்பேட்டையைச் சேர்ந்த, 40 வயது பெண், ஒன்பது மாதங்களுக்கு முன், கணவனை விவகாரத்து செய்தார். பின், மறுமணம் செய்ய, திருமண வலை தளத்தில் விண்ணப்பித்தார்.ஆந்திர மாநிலம், சித்துாரைச் சேர்ந்த மனோகரன், 45, என்பவர் தொடர்பு கொண்டு, மறுமணம் செய்ய சம்மதித்துள்ளார். இருவரும், பழகி வந்துள்ளனர்.திருமணம் செய்ய போகிறார் என்ற நம்பிக்கையில், மனோகரனுக்கு, 10 லட்சம் ரூபாய் மற்றும் மொபைல் போன் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கி உள்ளார்.ஒரு கட்டத்தில், மொபைல் போனை அணைத்து, தலைமறைவாகி உள்ளார். ஏமர்ந்த பெண், சைதாப்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.விசாரணையில், மனோகரனுக்கு, ஏற்கனவே திருமணமாகி, இரு குழந்தைகள் இருப்பது தெரிந்தது. இதை சொல்லாமல், திருமணம் செய்வதாக கூறி மோசடி செய்தது தெரிந்தது.நேற்று, மனோகரனை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X