சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பொறுப்பில்லாத மகன்களால் குடும்பமே தற்கொலை முயற்சி: ஒருவர் பலி

Added : பிப் 21, 2021
Share
Advertisement
கொருக்குப்பேட்டை,: கொருக்குப்பேட்டையில், பொறுப்பில்லாத ஊதாரி மகன்களால், ஒரு குடும்பமே தற்கொலைக்கு முயன்று, அதில் ஒருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, கொருக்குப்பேட்டை, தங்கவேலு தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஷன், 52; ரியல் எஸ்டேட் தரகர். இவரது மனைவி சியாமளா, 50. இவர்களது மகன்கள் கார்த்திக், 22, பிரவீன், 21, விஜய குமார், 19. கார்த்திக், மனநலம்

கொருக்குப்பேட்டை,: கொருக்குப்பேட்டையில், பொறுப்பில்லாத ஊதாரி மகன்களால், ஒரு குடும்பமே தற்கொலைக்கு முயன்று, அதில் ஒருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, கொருக்குப்பேட்டை, தங்கவேலு தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஷன், 52; ரியல் எஸ்டேட் தரகர். இவரது மனைவி சியாமளா, 50. இவர்களது மகன்கள் கார்த்திக், 22, பிரவீன், 21, விஜய குமார், 19. கார்த்திக், மனநலம் பாதிக்கப்பட்டனர்.பிரவீன், விஜய குமார் ஆகியோர் வேலைக்கு செல்லாமல், சேர்ந்து குடிப்பதும், கஞ்சா புகைப்பதுமாக இருந்து உள்ளனர்.அக்கம்பக்கத்தில் கடன் வாங்கி, குடும்ப செலவை பார்த்து வந்த பெற்றோரை, மகன்கள் இருவரும் அடித்து துன்புறுத்திஉள்ளனர்.இதனால் மனவேதனைஅடைந்த வெங்கடேசன், சியாமளா, மூத்த மகன் கார்த்திக் ஆகியோர் செல்லாயில் குடித்து, நேற்று முன்தினம் தற்கொலைக்கு முயன்றனர்.அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், கார்த்திக் சிகிச்சை பலனின்றி, நேற்று உயிரிழந்தார்.வெங்கடேசன், சியாமளா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொருக்குப்பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில், சியாமளா வீட்டு வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றியதும், அந்த பணத்தையும், ஊதாரி மகன்கள் பிடுங்கி, குடித்து செலவழித்தும் தெரியவந்தது.மேலும், 10 மாதங்களாக வீட்டு வாடகை செலுத்தாததால், வீட்டு உரிமையாளர் வீட்டை காலி செய்யுமாறு கூறி உள்ளார். இந்த விரக்தியில் தற்கொலை முடிவை எடுத்தது தெரிய வந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X