உடுமலை:தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூட்டங்களில் பேசும் போது, குறிப்புகளுக்கு 'துண்டுச்சீட்டு' வைத்து பேசுவார். எதிர்க்கட்சியினர் 'துண்டுச்சீட்டு ஸ்டாலின்' என விமர்சனம் செய்து வருகின்றனர்.தற்போது நவீன தொழில் நுட்பத்துக்கு மாறியுள்ளார். தாராபுரத்தில், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி நடந்தது. அவர் பேசும்போது, முன்னால் பெரிய 'டிவி' திரையில், குறிப்புகள் ஓடிக்கொண்டிருந்தது. மேடையில் அமைக்கப்பட்டிருந்த 'பேடியம்' முன் இரு புறமும், 'டெலிபேடு' வைக்கப்பட்டிருந்தது. மேடையில் அமர்ந்திருந்த 'ஐபேக்' ஊழியர், கம்ப்யூட்டர் மூலம் திரையில் ஓட்டினார்.
'ஒன்லி இங்கிலீஷ்' டாக்!
விழா முழுவதையும் 'ஐபேக்' நிறுவனம் ஒருங்கிணைத்த நிலையில், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளுக்கு ' சிறப்பு பாஸ்' வழங்கப்பட்டுள்ளது. கட்சிக்கு பல ஆண்டுகளாக உழைத்த கட்சியினர், ஸ்டாலின் வாகனம் வரும் வழித்தடத்தில் வந்தனர். அங்கு இருந்த 'ஐபேக்' நிறுவன ஊழியர்கள், தெலுங்கானா, பீஹார் உள்ளிட்ட வட மாநில ஊழியர்களாக இருந்ததால், மொழி புரியவில்லை.'ஒன்லி இங்கிலீஷ் ஆர் ஹிந்தி' என அவர்கள் பேசியதால், கட்சி நிர்வாகிகள் 'நொந்து' போய் திரும்பினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE