பொது செய்தி

தமிழ்நாடு

நகராட்சியில் வரி வசூல்

Added : பிப் 21, 2021
Share
Advertisement
திருத்தணி; 'திருத்தணி நகராட்சியில், வரி செலுத்தாதவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என, ஆட்டோ மூலம் எச்சரிக்கப்படுகிறது.திருத்தணி நகராட்சியில், சொத்து வரி, வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் குத்தகை இனம் என, ஒராண்டுக்கு, 3.20 கோடி ரூபாய், நகராட்சிக்கு வருவாய் கிடைக்கிறது.இதில், ஊழியர்களுக்கு சம்பளம், மின் கட்டணம் மற்றும் வளர்ச்சிப் பணிகள்

திருத்தணி; 'திருத்தணி நகராட்சியில், வரி செலுத்தாதவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என, ஆட்டோ மூலம் எச்சரிக்கப்படுகிறது.திருத்தணி நகராட்சியில், சொத்து வரி, வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் குத்தகை இனம் என, ஒராண்டுக்கு, 3.20 கோடி ரூபாய், நகராட்சிக்கு வருவாய் கிடைக்கிறது.இதில், ஊழியர்களுக்கு சம்பளம், மின் கட்டணம் மற்றும் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், பெரும்பாலானோர் நகராட்சிக்கு வரி செலுத்தாமல் உள்ளனர்.வரி பாக்கி அதிகளவில் உள்ளதால், வளர்ச்சிப் பணிகள் முடங்கியுள்ளன. இது குறித்து, நகராட்சி ஆணையர் பாலசுப்ரமணியம் கூறியதாவது: நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரிகள் குறித்து, சம்பந்தப்பட்ட வீடு, கடை உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்து, எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி வருகிறோம்.ஆனால், வரி செலுத்தாமல் அலட்சியமாக உள்ளனர். எனவே தான், தற்போது, ஆட்டோ மூலம் சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் குத்தகை இனங்களை, நகராட்சியில் உள்ள, கணினி வரி வசூல் மையத்தில் செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில், ஜப்தி, நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என, எச்சரித்து வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X