உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம் தொகுதிகளுக்கு, தாராபுரத்தில் நடந்த 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசியதாவது :மூன்று மாதத்தில் தி.மு.க., ஆட்சி அமையும்; நீங்கள் கொடுக்கும் மனுக்களுக்கு, 100 நாளில் தீர்வு காண தனித்துறை, சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவர். கொடுத்த மனுக்களை பதிவு செய்து, உங்களுக்கு 'அக்னாலேஜ்மென்ட்' கார்டு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு தனி மரியாதை, அதிகாரம், 'பவர்' வெயிட் இருக்கும். ஆட்சி அமைந்து பதவி ஏற்றதும், கோட்டைக்குள் நேராக, முதல்வர் அறைக்கு வரலாம். அதனால் தான் அழுத்தி கூறுகிறேன்.இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE