கடலுார் : என்கவுன்டரில் பலியான ரவுடி உடலை உறவினர்கள் 4ம் நாளாக வாங்க மறுத்தனர்.
கடலுார், சுப்புராயலு நகரைச் சேர்ந்தவர் ரவுடி வீரா (எ) வீராங்கன், 32; இவர் கடந்த 16ம் தேதி தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்து விட்டு தப்பிய ரவுடி கிருஷ்ணன், 30; பண்ருட்டி அருகே போலீஸ் என்கவுன்டரில் பலியானார்.வீரா கொலை வழக்கில் 10 பேர் மீது திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்தனர். இதில் திருப்பாதிரிப்புலியூர் மார்க்கெட் காலனி அருண்பாண்டியன், 24: உட்பட 4 பேரை கைது செய்தனர்.
திருப்பாதிரிப்புலியூர் குப்பன்குளம் பன்னீர்செல்வம் மகன் சாமிநாதன், 30; உட்பட 3 பேர் நேற்று முன்தினம் விழுப்புரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தனர். தலைமறைவான அதே பகுதியைச் சேர்ந்த விக்ரம், ராக்கியை தேடி வருகின்றனர்.என்கவுன்டர் சம்பவம் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்; கிருஷ்ணன் மனைவிக்கு அரசு வேலை, குடும்பத்திற்கு ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கூறி 4ம் நாளாக நேற்றும் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டனர்.இதனால் கடலுார் சுப்புராயலு நகர் பகுதியில் 4ம் நாளாக நேற்றும் பதற்றமான சூழல் நிலவியது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE