பொது செய்தி

இந்தியா

ஜி.எஸ்.டி.,யில் புதிய மாற்றம் ; வரி விகிதங்கள் மாறக்கூடும்

Updated : பிப் 21, 2021 | Added : பிப் 21, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி : ஜி.எஸ்.டி., எனும், சரக்கு மற்றும் சேவைகள் வரியை மேலும் எளிதாக்கும் முயற்சியில், மத்திய அரசு இறங்கி உள்ளது.குறிப்பாக, வரி விகிதங்கள் குறித்த அடுக்குகளை குறைக்கவும் முயற்சிகள் எடுக்குமாறு, இத்துறையினரை, அரசு கேட்டுக் கொண்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக, 12 சதவீத பிரிவையும், 18 சதவீத பிரிவையும் ஒன்றிணைக்கும் முயற்சி குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கு

புதுடில்லி : ஜி.எஸ்.டி., எனும், சரக்கு மற்றும் சேவைகள் வரியை மேலும் எளிதாக்கும் முயற்சியில், மத்திய அரசு இறங்கி உள்ளது.latest tamil newsகுறிப்பாக, வரி விகிதங்கள் குறித்த அடுக்குகளை குறைக்கவும் முயற்சிகள் எடுக்குமாறு, இத்துறையினரை, அரசு கேட்டுக் கொண்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக, 12 சதவீத பிரிவையும், 18 சதவீத பிரிவையும் ஒன்றிணைக்கும் முயற்சி குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பே, இப்படி ஒரு முயற்சி குறித்த பேச்சுகள் வெளிவந்தன. ஆனால், அது நடைபெற வில்லை. இந்நிலையில், இப்போது மீண்டும், இது குறித்த ஆலோசனையில் இறங்கி இருக்கிறது அரசு. இது சம்பந்தமாக மாநிலங்களின் கருத்துக்களும் கேட்கப்படும்.

இதுகுறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:அடுத்த, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், மார்ச் மாதம் நடைபெற உள்ளது. அப்போது இந்த வரி அடுக்குகளின் ஒன்றிணைப்பு குறித்து, கவுன்சில் உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும்.தற்போது, 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் மற்றும் கூடுதல் வரிகள் என பல அடுக்குகளில், வரி விதிப்புகள் உள்ளன. இவை குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக, பல தரப்பிலிருந்தும் கருத்துகள் வருகின்றன.இதனால், 12 சதவீதத்தையும், 18 சதவீதத்தையும் ஒன்றிணைத்து, புதிய வரி விகிதம் அறிவிக்கப்படும்.


latest tamil newsமேலும், 15வது நிதி ஆணையமும், 12 மற்றும்18 சதவீத பிரிவுகளை ஒன்றிணைக்கும்படி ஆலோசனை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.ஆனால் இவற்றை ஒன்றிணைத்து, எத்தனை சதவீதமாக முடிவு செய்யப்படும் என்பது தெரியவில்லை. அது, 14 அல்லது 16 சதவீதமாக மாற்றி அமைக்கப்படலாம். எதுவாக இருந்தாலும், ஜி.எஸ்.டி., கவுன்சில் உறுப்பினர்களின் கருத்து என்னவாக இருக்கிறது என்பதை பொறுத்தே, ஒருங்கிணைப்பு நிகழும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TechT - Bangalore,இந்தியா
21-பிப்-202120:29:00 IST Report Abuse
TechT I think they are going to make it equal to 20% for all items.
Rate this:
Cancel
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் பெட்ரோல் டீசல் காஸ் இவைகளுக்கு போடும் வரியை கொஞ்சம் கொறைச்சு மத்த எல்லா பொருள்கள் மேல போடறலாம்
Rate this:
Cancel
Murthy - Bangalore,இந்தியா
21-பிப்-202114:30:10 IST Report Abuse
Murthy ஜி.எஸ்.டி மிகப்பெரிய தோல்வி......பொருளாதாரம் அகலபாதாளத்திற்கு போனதற்கு இதுவும் ஒரு காரணம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X