பொது செய்தி

இந்தியா

இயல்பு நிலைக்கு திரும்பும் விமான போக்குவரத்து துறை!

Updated : பிப் 21, 2021 | Added : பிப் 21, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
கொரோனா பரவலால், கடந்த எட்டு மாதங்களாக சுதந்திரமாக பறக்க முடியாமல் தவித்து வந்த விமானத் துறை, தற்போது தொற்றுநோய் பரவல் குறைந்து வருவதை அடுத்து, இயல்பு நிலைக்கு திரும்பி வரத் துவங்கியுள்ளது.நம் நாட்டில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச், 25ம் தேதி முதல், விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டன. இதையடுத்து, உள்நாட்டு விமான சேவை மட்டும்

கொரோனா பரவலால், கடந்த எட்டு மாதங்களாக சுதந்திரமாக பறக்க முடியாமல் தவித்து வந்த விமானத் துறை, தற்போது தொற்றுநோய் பரவல் குறைந்து வருவதை அடுத்து, இயல்பு நிலைக்கு திரும்பி வரத் துவங்கியுள்ளது.



latest tamil news



நம் நாட்டில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச், 25ம் தேதி முதல், விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டன. இதையடுத்து, உள்நாட்டு விமான சேவை மட்டும் துவங்கப்பட்டது. வளர்ச்சிவெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்து வர, 'வந்தே பாரத்' திட்டத்தின்கீழும், ஒப்பந்தம் அடிப்படையிலும், சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பல மாதங்களுக்குப் பின், விமானத் துறை, தற்போது, இயல்பு நிலைக்கு திரும்பி வரத் துவங்கி உள்ளது.கடந்த, 13ம் தேதி நிலவரப்படி, உள்நாட்டில், 2,308 விமான சேவைகள் மூலம், மூன்று லட்சத்து, 10 ஆயிரத்து, 387 பேர் பல ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.

இது, கொரோனா காலத்திற்கு முந்தைய உள்நாட்டு விமான போக்குவரத்தில், அன்றாட சராசரி பயணியரில், 77.6 சதவீதம்; தினசரி விமான சேவையில், 79.5 சதவீதம் ஆகும்.கடந்த ஜனவரியில், இன்டிகோ, கோஏர், ஏர் இந்தியா, விஸ்டாரா, ஏர் ஏஷியா இந்தியா, ஸ்பைஸ்ஜெட் ஆகிய ஆறு விமான நிறுவனங்கள், 65 - 70 சதவீத பயணிகளுடன் போக்குவரத்து மேற்கொண்டு உள்ளன. இதில், குறைந்த கட்டணம் வசூலிக்கும், இன்டிகோ நிறுவனம் மட்டும், அதிகப் பட்சமாக, 42 லட்சம் பயணியரை கையாண்டுள்ளது. கடந்த, 2019 டிசம்பருடன் ஒப்பிடும்போது, 2020, டிசம்பரில், உள்நாட்டு விமானங்கள், 58 சதவீத பயணியரை கையாண்டுள்ளன. கடந்த சில வாரங்களாக, உள்நாட்டு விமான போக்குவரத்து வளர்ச்சி கண்டு வருவது தெரிகிறது.


latest tamil news



எனினும், நாட்டின் பல்வேறு நகரங்களை இணைக்கும், சர்வதேச விமான போக்குவரத்துதான், உள்நாட்டு விமான சேவையின் வளர்ச்சிக்கு உதவும்.விமான கட்டண வரம்பு, வரும், மார்ச், 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அடிப்படை மற்றும் வரம்பு கட்டணங்களை, இந்திய விமான போக்குவரத்து ஆணையம் உயர்த்தியுள்ளது. இது, இக்கட்டணங்களுக்கு மேல் குறிப்பிட்ட தொகையை உயர்த்திக் கொள்ளும் வாய்ப்பை, விமான நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது.

எதிர்பார்ப்பு : அதுபோல, கடந்த ஆண்டு கோடையில் விமான நிறுவனங்கள் கையாண்ட பயணியரில், 80 சதவீத அளவிற்கு தற்போது கையாள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த இரு அம்சங்களும், உள்நாட்டு விமான போக்குவரத்து துறை, எழுச்சி காண வழி வகுத்துள்ளது.


latest tamil news



விமான போக்குவரத்து துறை அமைச்சர், ஹர்தீப் புரி, சமீபத்தில், 'கோடை காலத்தை முன்னிட்டு, வரும் வாரங்களில், உள்நாட்டு விமான கட்டண வரம்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்படும்' என, அறிவித்திருப்பது கவனிக்கத்தக்கது. அதனால், உள்நாட்டு விமான சேவை விரைவில் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
21-பிப்-202113:15:21 IST Report Abuse
Ramesh Sargam ஆம், உண்மைதான். சில நாட்களுக்கு முன்பு நான் பயணித்த விமானத்தில் 'விமானம் full'. ஒரு இருக்கை கூட காலி இல்லை. ஒரு சில விமான நிலையங்களை பார்த்தால் ஏதோ கறிகாய் விற்கும் மார்க்கெட் போல அவ்வளவு கும்பல். மக்கள் துணிந்துவிட்டார்கள். ஆகையால்தான், இப்பொழுது இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் மீண்டும் கொரானா பதற்றம்.
Rate this:
Cancel
rauf thaseem - mawanella,இலங்கை
21-பிப்-202108:26:53 IST Report Abuse
rauf  thaseem இந்தியாவுக்கு போய்வந்து வருடம் ஆகிவிட்டது , இங்கு கொரோன குறைந்த பாடில்லை பிரித்தானியாவின் கொடிய வைரஸ் இங்கும் வந்து விட்டதாம் , இப்போதைக்கு இலங்கைக்கு இந்தியா விமான சேவை நடக்குமா
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
21-பிப்-202108:15:49 IST Report Abuse
A.George Alphonse கொரோனாவும் இயல்பு நிலைக்கு திரும்பி இந்த ஆண்டையும் போன ஆண்டுபோல் ஆட்டிபடைக்க ஒரு நல்ல சந்தர்ப்பம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X