நாம் அனுப்பும் 'இ-மெயில்' எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் பருவநிலை மாற்றத்துக்கு காரணமாக அமையும் கார்பன் வெளியீட்டையும் குறைக்கலாம் என ஆய்வு தெரிவித்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப துறையில் இ-மெயில் வரவுக்குப்பின் தகவல் பரிமாற்றம் உலகளவில் மிக எளிதாக மாறியது. உலகில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு சில வினாடிகளில் தகவல்களை பரிமாற முடிகிறது. ஆண்டுதோறும் மக்கள்தொகை எண்ணிக்கையை போல, இ-மெயில் பயன்பாடும் அதிகரிக்கிறது. உலகளவில் ஒரு நிமிடத்தில் ஆயிரக்கணக்கான இ-மெயில் அனுப்பப்படுகிறது.
இந்நிலையில் இ-மெயிலை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேவையில்லாமல் அனுப்பப்படும் (எ.கா., ஹாய், பைன், தேங்க்ஸ், ஹாஹா) போன்ற மெயில்களை தவிர்க்க வேண்டும் என பிரிட்டன் அரசு அந்நாட்டு
மக்களை வலியுறுத்தியுள்ளது. இதற்கு காரணம் அதிகரிக்கும் இ-மெயில் எண்ணிக்கை, பருவநிலை மாற்றத்துக்கு காரணமாக அமைகிறது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளதால், இந்த முடிவை பிரிட்டன் அரசு எடுத்துள்ளது.
எப்படி காரணம்
ஆனால் இ-மெயிலுக்கும் - கார்பனுக்கும் என்ன சம்பந்தம் என கேள்வி எழலாம். உண்மையில் நீங்கள் ஒரு மின்னஞ்சலை அனுப்பினால், அது மின்சாரத்தை செலவழிக்கும் மின்னணு சாதனங்களின் சுழற்சியில் செல்கிறது. முதலில் உங்கள் வை-பை ரவுட்டர் - வயர் வழியாக, உள்ளூரில் இருக்கும் இணைப்பகத்துக்கு சிக்னல் கொடுக்கிறது.
பின் சாலையில் இருக்கும் கிரீன் பாக்ஸ்க்கும், பின் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கும், பின் பெரிய டேட்டா சென்டருக்கும் செல்கிறது. இவை எல்லாமே மின்சாரத்தால் இயங்குபவை.இ-மெயில் எண்ணிக்கையை குறைப்பதால் அப்படி என்ன மாற்றம் நிகழ்ந்து விட போகிறது என நினைக்கலாம். பிரிட்டனில் ஒருவர், ஒரு இ-மெயிலைகுறைப்பதன் மூலம் ஓராண்டுக்கு 16,433 டன் அளவிலான கார்பனை வெளியீட்டை குறைக்கலாம் என பைனான்சியல் டைம்ஸ் ஆய்வு தெரிவிக்கிறது.
பிரிட்டனின் பசுமை இல்ல வாயுக்கள் வெளியீடு அளவு 2019 கணக்கின் படி, 43.52 கோடி டன். இதில் 0.0037 சதவீதம் ஒரு இ-மெயிலால் ஏற்படுகிறது. இது மிக மிக குறைவு என்றாலும் கோடிக்கணக்கான பிரிட்டன் மக்கள், தேவையற்ற மெயிலை தொடர்ந்து குறைக்கும் போது, கார்பன் வெளியீட்டை தடுப்பதில் முக்கிய பங்காற்றலாம் என அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிரிஸ்டல் பல்கலை பேராசிரியர் கிறிஸ் பிரிஸ்ட் கூறுகையில், இ-மெயில் அனுப்பாவிட்டாலும் உங்கள் வை-பை சாதனம், கம்ப்யூட்டர், இன்டர்நட் ஆகியவை ஆனில் தான் இருக்கும். மின்சாரம் பயன்பாடு குறையப்போவதில்லை. டேட்டா சென்டரில் வேண்டுமானால் குறையலாம் என்றார்.
கார்பன் வெளியீட்டில் குறைந்த பாதிப்பை இ-மெயிலுக்கு பதிலாக, ஆன்லைன் கேம், வீடியோ
ஸ்ட்ரீமிங் பயன்பாட்டை குறைப்பதில் கவனம் செலுத்தலாம் என சில ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
400
*உலகில் 2019 கணக்கின் படி 400 கோடி பேர் இ-மெயில் பயன்படுத்துகின்றனர். இது 2024ம் ஆண்டுக்குள் 448 கோடியாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் 2018 கணக்கின் படி, ஒரு நாளைக்கு 28 ஆயிரம் கோடி இ-மெயில் அனுப்பப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE