புதுச்சேரி அரசுக்கு தொடர்கிறது சிக்கல்: மேலும் 2 எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா

Updated : பிப் 21, 2021 | Added : பிப் 21, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
புதுச்சேரி: எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமாவால் சிக்கலில் உள்ள நாராயணசாமிக்கு நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. ராஜ்பவன் தொகுதி காங்., எம்.எல்.ஏ., லட்சுமி நாராயணன், தட்டாஞ்சாவடி தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., வெங்கடேசன் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. காங். - எம்.எல்.ஏ. தனவேலு கடந்தாண்டு தகுதி நீக்கம்
புதுச்சேரி, எம்எல்ஏ, லட்சுமி நாராயணன், ராஜினாமா, நாராயணசாமி,

புதுச்சேரி: எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமாவால் சிக்கலில் உள்ள நாராயணசாமிக்கு நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. ராஜ்பவன் தொகுதி காங்., எம்.எல்.ஏ., லட்சுமி நாராயணன், தட்டாஞ்சாவடி தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., வெங்கடேசன் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. காங். - எம்.எல்.ஏ. தனவேலு கடந்தாண்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டார். சமீபத்தில் அமைச்சர்கள் இருவரும் காங். - எம்.எல்.ஏ.க்கள் இருவரும் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இதனால் காங். - எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 15ல் இருந்து 10 ஆக குறைந்தது. அதாவது 28 எம்.எல்.ஏ.க்களை கொண்ட சட்டசபையில் காங். ஆட்சிக்கு 14 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு மட்டுமே உள்ளது.

பெரும்பான்மைக்கு 15 எம்.எல்.ஏ.க்கள் தேவை.எதிர்க்கட்சி வரிசையில் என்.ஆர்.காங். கட்சிக்கு 7 அ.தி.மு.க.வுக்கு 4 பா.ஜ.வுக்கு 3 என 14 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். காங். ஆட்சி பெரும்பான்மையை இழந்து விட்டதாக கவர்னரிடம் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் 14 பேரும் கையெழுத்திட்டு மனு அளித்தனர். இதையடுத்து 22ம் தேதி (நாளை) சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதல்வர் நாராயணசாமிக்கு கவர்னர் தமிழிசை கெடு விதித்துள்ளார்.


latest tamil news




மரியாதை இல்லை

இந்நிலையில், ராஜ்பவன் தொகுதி எம்.எல்.ஏ., லட்சுமி நாராயணன், சபாநாயகர் சிவக்கொழுந்துவை சந்தித்து, தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதனால், நாராயணசாமிக்கு நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது.


latest tamil news


ராஜினாமா செய்த பிறகு லட்சுமிநாராயணன் கூறியதாவது: கட்சியிலும், ஆட்சியிலும் எனக்கு மரியாதை இல்லை. என்னால் ஆட்சி கவிழவில்லை. ஏற்கனவே ஆட்சி கவிழ்ந்த நிலையில் தான் உள்ளது. இத்தனை நாள், என்னால் ஆட்சி கவிழக்கூடாது என அமைதியாக இருந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.


திமுக எம்எல்ஏ விலகல்



இதனை தொடர்ந்து தட்டாஞ்சாவடி தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., வெங்கடேசனும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


latest tamil news


இது தொடர்பாக அவர் கூறுகையில், புதுச்சேரி அரசால் தட்டாஞ்சாவடி மக்களுக்கு எதுவும் செய்ய இயலவில்லை. நல்லது செய்யாமல், மக்களிடம் சென்று எப்படி ஓட்டு கேட்க முடியும். எம்.எல்.ஏ., பதவியை மட்டும் ராஜினாமா செய்கிறேன். தி.மு.க.,வில் இருந்து விலகவில்லை. ராஜினாமா குறித்து திமுக., மேலிடத்திடம் தெரிவித்து விட்டேன். இவ்வாறு அவர் கூறினார்

இரு எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமாவால், காங்., பலம் 12 ஆக குறைந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-பிப்-202123:49:15 IST Report Abuse
தமிழவேல் கடைசியா தாவுரவன் பெட்டிதான் பெருசா இருக்கும்...
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
21-பிப்-202122:25:08 IST Report Abuse
Baskar இது தேவையா நாராயணா. இனிமேல் சலவை வெட்டி கட்டிக்கொண்டு தேசியக்கொடி காரில் பவனி வராமல் உன்னை உன் கட்சியினர் தடுத்து விட்டார்களே. வறுத்த படாதே இனி உன் அரசியல் வாழ்க்கை அசத்தமிக்கும் நேரமிது நீயாக விலகினால் மக்கள் மிகவும் சந்தோஷ படுவார்கள்.
Rate this:
Cancel
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
21-பிப்-202121:53:18 IST Report Abuse
DARMHAR நாராயணசாமி ஆட்சிக்கு பதினைந்து நாளைக்குள் கோவிந்தா கோவிந்தா தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X