பொது செய்தி

தமிழ்நாடு

தாய்மொழிக்கு தலை வணங்குவோம் : டுவிட்டரில் டிரெண்டிங்

Updated : பிப் 21, 2021 | Added : பிப் 21, 2021 | கருத்துகள் (62)
Share
Advertisement
சென்னை : இன்று உலக தாய்மொழி தினம். இதையொட்டி பலரும் அவர்களது தாய்மொழியை கொண்டாடி வருவதால் #MotherLanguageDay என்ற ஹேஷ்டாக் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. இதில் தமிழ் மொழியை குறிக்கும் வகையில் #தமிழோடுவாழ்வோம், #தாய்மொழிநாள், #தமிழ் ஆகிய ஹேஷ்டாக்குகள் டிரெண்ட் ஆகின. பரந்து விரிந்த இந்த பூமியில் உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மொழியை பேசி வருகின்றனர். மொழி என்பது வெறும்
MotherLanguageDay, தமிழோடுவாழ்வோம், தாய்மொழிநாள், தமிழ்

சென்னை : இன்று உலக தாய்மொழி தினம். இதையொட்டி பலரும் அவர்களது தாய்மொழியை கொண்டாடி வருவதால் #MotherLanguageDay என்ற ஹேஷ்டாக் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. இதில் தமிழ் மொழியை குறிக்கும் வகையில் #தமிழோடுவாழ்வோம், #தாய்மொழிநாள், #தமிழ் ஆகிய ஹேஷ்டாக்குகள் டிரெண்ட் ஆகின.

பரந்து விரிந்த இந்த பூமியில் உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மொழியை பேசி வருகின்றனர். மொழி என்பது வெறும் கலந்துரையாடுவதற்காக மட்டுமல்ல, அதைப் பேசுகின்ற இனத்தின் அரசியல், கலை, வரலாறு, சமூகநிலை, பழக்கவழக்கம், ஒழுக்கநெறிகள் மற்றும் எண்ணங்கள் போன்ற பல வாழ்வியல் கூறுகளையும், பண்பாட்டு நிலைகளையும் விளக்கமாக கொண்டு விளங்குகிறது. அப்படிப்பட்ட மொழியை காப்பது ஒவ்வொருவரின் கடமை. அப்படி உலகில் உள்ள அனைத்துத் தாய்மொழிகளைப் பாதுகாப்பதற்காகவும் உலக தாய்மொழி நாள் இன்று கொண்டாடப்படுகின்றது.
இந்தியா பன்மொழி கலந்த தேசம். சுதந்திரத்திற்கு பின் மாநிலங்கள் பிரிக்கப்பட்டது கூட மொழிவாரியாகத்தான். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பல மொழி பேசும் நம் மக்கள் தாய் மொழி தினத்தை இன்று கொண்டாடி வருகின்றனர். டுவிட்டரில் பலரும் தங்களது தாய் மொழியின் சிறப்பை பதிவிட்டு வருகின்றனர்.

இந்தியாவில் உள்ளோர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என தாங்கள் சார்ந்த மொழிகளில் அருமை, பெருமைகளை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழ் மொழியை வைத்து #தமிழோடுவாழ்வோம், #தாய்மொழிநாள், #தமிழ் ஆகிய மூன்று ஹேஷ்டாக்குகள் தனியாக டிரெண்ட் ஆகின்றன.


latest tamil news
''பணி நிமித்தம் உள்ளிட்ட பல காரணங்களால் ஒருவர் வேறு மாநிலத்திற்கோ அல்லது வேறு ஒரு நாட்டிற்கோ கூட செல்லலாம் ஆனால் எங்கும் சென்றாலும் தன் தாய் மொழியை மறக்க கூடாது''. ''தமிழ் என்பது உலகின் மிக நீண்ட கால பாரம்பரிய மொழிகளில் ஒன்றாகும். ''தமிழ், அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட முதல் இந்திய மொழி'', தமிழில் உள்ள வேர்ச்சொற்கள் உலகம் முழுவதும் உள்ள மொழிகளில் காணப்படுகின்றன''.

''வாழ்வியல் சிந்தனைகளை நம் தாய்மொழித் தமிழ் சொல்லிக் கொடுத்தது. இந்தச் சமூகம் வாழ வழி காட்டியது. நம் தமிழ் இனத்தின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றது தமிழ்''. “தீதும் நன்றும் பிறர் தர வாரா”என்று உலகத்திற்கே வாழ்வியல் கோட்பாட்டை கோடு போட்டுக் காட்டிய நம் தாய்மொழித் தமிழை வாழ்த்தி வணங்குவோம்.

உலக அளவில் பழமை வாய்ந்த மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. “கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி” நம் தமிழ். அப்படிப்பட்ட நம் தாய்மொழித் தமிழை வாழ்த்தி வணங்குவோம். ஒவ்வொரும் தமது தாய்மொழியை போற்றி வணங்குவோம்.

Advertisement
வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathimandhiri - chennai,இந்தியா
22-பிப்-202120:45:30 IST Report Abuse
mathimandhiri உணர்ச்சிகளை கொப்பளிக்க வேண்டாம். ஜம்பத்துக்கு ஆங்கிலத்திலோ வேறு மொழியிலோ பேசுவதைத் தவிர்த்து தாய் மொழியில் பேசுங்கள். தமிழே பாட மொழியாக, குறைந்த பட்சம் ஒரு "மொழிப்" பாடமாகவாவது இருக்கும் பள்ளிகளில் சேருமாறு உங்கள் குழந்தைகளை பார்த்துக் கொள்ளுங்கள். சிறு வயதில் தாய் மொழியில் படிக்க எழுத விட்டுப் போனால் தாய் இருக்கும் போதே மாற்றாந்தையிடம் வளர்வது போல் தான். வாழ்க்கையின் மிகப் பெரிய இழப்பு அதுவே. அது போக வாழ்க்கைக்கு உதவும் எத்தனை மொழிகளை வேண்டுமென்றாலும் பயிலலாம்.
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
22-பிப்-202120:37:17 IST Report Abuse
mathimandhiri தமிழை வைத்து மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி கோடிகளில் துட்டு பார்த்த தமிழ் மொழியின் ஏக போக காவலர்கள் நடத்தும் பள்ளிகளில் இந்திக்கு "எஸ்". தமிழில் பேச "நோ 'இது எப்படி இருக்கு ?
Rate this:
Cancel
Michal - Chennai,இந்தியா
22-பிப்-202108:59:19 IST Report Abuse
Michal யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்...
Rate this:
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
22-பிப்-202111:56:22 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன்அப்போ கோயில்களின் ஏன் புரியாத தெரியாத விளங்காத தேவையற்ற SANSKIRTIL அர்ச்சனை செய்னும் , அர்ச்சனை டிக்கெட் நாம் வாங்கணும் , அர்ச்சனை சமஸ்கிறித்ததில் எங்கவாவது இந்த கூத்து நடக்குமா , அவன் என்ன சொன்னான் என்று உனக்கு புரியாது , ஏன் நமக்கு தெரிந்த தமிழில் அர்ச்சனை செய்ய கூடாது...
Rate this:
mathimandhiri - chennai,இந்தியா
22-பிப்-202114:49:12 IST Report Abuse
mathimandhiriகோயில்களில் அன்றாடம் இசைக்கப் பெரும் தமிழ்ப் பாசுரங்களும் தேவார பாடல்களும் கோயில்களுக்கு போவோர் காதில் தான் விழும். வெறும் வெற்று நபர்கள் மற்றும் பொழுது போக்கிற்காக கருத்துக் போடும்.....காதில் எல்லாம் விழுமா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X