அறிவியல் ஆயிரம்
மூன்று மாத இடைவெளி
ஆக்ஸ்போர்டு பல்கலை - அஸ்ட்ராஜெனிகா இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி பல்வேறு நாடுகளில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மற்ற தடுப்பூசிகளை போல இதையும் இரண்டு டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டும். இந்நிலையில் முதல் டோஸ் செலுத்தப்பட்ட மூன்று மாதங்களுக்குப்பின் (12 வாரம்) இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்பவர்களிடம் இந்த தடுப்பூசி 81 சதவீத செயல்திறனுடன் சிறப்பாக செயல்படுகிறது. முன்னதாக 6 வாரம் இடைவெளியில் இரண்டு டோஸ் செலுத்துபவர்களிடம் 55 சதவீத செயல்திறன் தான் அளிக்கிறது.
தகவல் சுரங்கம்
முதல் சுற்றுலா பயணி
அமெரிக்காவை சேர்ந்தவர் டென்னிஸ் டிட்டோ. 1940 ஆக.8ல் பிறந்த இவர் ஏரோநாட்டிகல் இன்ஜினியர், தொழிலதிபராக இருந்தவர். இவர் உலகின் முதல் விண்வெளி சுற்றுலாப்பயணி என அழைக்கப்படுகிறார். இவர் 2001 ஏப்., 28ல் ரஷ்யாவின் 'சோயுஜ் டி.எம் - 32' விண்கலம் மூலம் விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி மையத்துக்கு சுற்றுலா சென்றார். ஏழு நாட்கள், 22 மணி, 4 நிமிடம் விண்வெளியில் தங்கியிருந்தார். இவர் தன் விண்வெளி பயணத்துக்காக ரூ.137 கோடி பயணக் கட்டணமாக செலுத்தினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE