பெட்ரோல், டீசல் விலையை குறைத்தார் மேற்கு வங்க முதல்வர்!

Updated : பிப் 21, 2021 | Added : பிப் 21, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
கோல்கட்டா: பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநில அரசு வரியை ஒரு ரூபாய் குறைப்பதாக மேற்கு வங்க அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயை தாண்டியுள்ளது. இவ்விலை ஏற்றத்துக்காக காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து

கோல்கட்டா: பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநில அரசு வரியை ஒரு ரூபாய் குறைப்பதாக மேற்கு வங்க அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.latest tamil newsபெட்ரோல் மற்றும் டீசல் விலை 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயை தாண்டியுள்ளது. இவ்விலை ஏற்றத்துக்காக காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. பல்வேறு இடங்களில் பேரணிகள், கடையடைப்புகளை காங்கிரஸ் நடத்தி வருகிறது.
கடந்த 12 நாட்களில் பெட்ரோல் விலை 3 ரூபாய் 63 காசுகளும், டீசல் விலை 3 ரூபாய் 84 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. 2010-க்கு பிறகு இது மிகப்பெரிய ஏற்றமாகும்.


latest tamil newsஇந்நிலையில் மேற்கு வங்க அரசு பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசு வரியிலிருந்து 1 ரூபாயை விட்டுக்கொடுத்துள்ளது. இந்த விலைக் குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அம்மாநிலத்தில் அமலுக்கு வரும். இது பற்றி பேசிய அம்மாநில நிதி அமைச்சர் அமித் மித்ரா, “ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்கும் மத்திய அரசு ரூ.32.90-ஐ வரியாக பெறுகிறது. மாநில அரசோ ரூ.18.46-ஐ மட்டுமே பெறுகிறது.

டீசலை பொறுத்தவரை ஒரு லிட்டருக்கு ரூ.31.80-ஐ மத்திய அரசு வரியாக பெறுகிறது. மாநில அரசு ரூ.12.77-ஐ பெறுகிறது. எரிபொருள் விலை ஏற்றத்தால் அவதிப்படும் மக்களுக்கு மேற்கு வங்க அரசின் இம்முடிவு சிறிது நிவாரணம் அளிக்கும்.” என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thirumurugan - Kuala Lumpur,மலேஷியா
22-பிப்-202119:53:10 IST Report Abuse
Thirumurugan பெட்ரோலுக்கு மத்திய அரசின் வரி ரூ.32.90 & டீசலுக்கு வரி ரூ 31.80. ஆனால் மொத்த உற்பத்திக்கு ஆகும் செலவு ரூ 32.00 தான். மக்களை பற்றி கொஞ்சமும் சிந்திக்காத மத்திய அரசு. இந்த கொரோனா பேரிடர் காலத்தில் இவ்வளவு வரி விதித்தால் மக்கள் எவ்வளவு சிரமப்படுவார்கள். என்ன பாவம் செய்தோமோ இது மாதிரி மக்கள் விரோத அரசை மத்தியில் கொண்டு வந்ததுக்கு. கடவுள் தான் இந்தியர்கள் அனைவரையும் காப்பாற்ற வேண்டும்.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
22-பிப்-202119:23:15 IST Report Abuse
vbs manian ஆட்சியை பிடிக்க ஏழை பங்காளன் வேஷம் போடுகிறார்கள். இலவச உணவு பொருட்கள் கட்டுபடியாகாது மானியங்கள் சலுகைகள் எவ்வளவு நாளைக்கு எத்தனை பேருக்கு கொடுக்க முடியும். உணவு உற்பத்தி செய்ய மின்சாரம் உற்பத்தி செய்ய பணமில்லாமல் முடியுமா. இவைகளை எப்படி இலவசமாக இல்லை மிக குறைந்த விலையில் கொடுக்க முடியும். அடிப்படை பொருளாதாரமே தவரயிருக்கிறது. கம்யூனிஸ்ட் நாடுகளில் கூட எல்லாம் இலவசம் இல்லை. இப்போது இன்னொரு அபத்தமான பிரச்சாரம். பாங்கில் மக்கள் போட்ட பணத்தையெல்லாம் எடுத்து ஏழைகளுக்கு கொடுங்கள் என்பது. நாடு திவால் ஆக வழி சொல்கிறார்கள். அடிப்படையான சில இயற்கை நியதிகளை மாற்ற முயன்று தோற்று போகிறார்கள். இது எல்லா கட்சிக்கும் பொருந்தும்.
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
22-பிப்-202113:38:12 IST Report Abuse
Malick Raja ஆளும் திறன் இல்லை என்றால் பதவி விலகல் ஒன்றே மாண்புக்கு அளவீடு .. அன்று அதைத்தான் இன்று ஆளுமையில் உள்ளவர்கள் சொன்னார்கள் எனது உலகரிந்த ஒன்று .. மத்திய அரசு மாண்புள்ளது என்பது ... இல்லை என்பதுதான் உண்மை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X