கோல்கட்டா:'மகளையே, மேற்கு வங்கம் விரும்புகிறது' என்ற, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தாவின் புதிய கோஷத்துக்கு, பா.ஜ., எதிர்கோஷத்தை வெளியிட்டுள்ளது.
'சகோதரியிடம் இருந்து விடுதலை' என்ற, கோஷத்துடன், 'வீடியோ' ஒன்றையும் வெளியிட்டு உள்ளது.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., அரசு அமைந்துள்ளது. தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களுடன், மேற்கு வங்கத்திலும், வரும், ஏப்., - மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.திரிணமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ., இடையே கடும் போட்டி நிலவுகிறது.
'மேற்கு வங்க மக்கள், சொந்த மகளையே விரும்புகின்றனர்' என்ற புதிய கோஷத்தை, மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் வெளியிட்டார்.இந்நிலையில், மம்தாவுக்கு எதிராக, புதிய கோஷத்தை, பா.ஜ., வெளியிட்டுள்ளது. மம்தாவை, அவரது கட்சியினர், 'தீதி' எனப்படும், சகோதரி என அழைப்பர்.
'தீதியிடம் இருந்து விடுதலை' என்ற கோஷத்தை பா.ஜ., வெளியிட்டுள்ளது.மேலும், 'அனிமேஷன்' முறையில் தயாரிக்கப்பட்டுள்ள, ஒரு இசை, 'வீடியோ'வையும், பா.ஜ., வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய நாடான இத்தாலியில், போராட்டத்துக்கு பயன்படுத்தப்படும் பாடல் அமைந்து உள்ள, 'டியூன்' இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, சமூக வலை தளத்தில், பா.ஜ., வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது:இந்த பாடல், இத்தாலி யின் கம்யூனிஸ்ட் பாடலின் அடிப்படையில் அமைந்து உள்ளது. கொள்கைகள் மாறுபட்டிருந்தாலும், போராட்டத்துக்கான, எதிர்ப்புக்கான அந்த குரல் உண்மையானது. மேற்கு வங்கத்தில் உள்ள தீதியின் அராஜக அரசுக்கு எதிரான மக்களின் குரலாக, இது அமைந்துள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE