திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் தொகுதி பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில இணைப் பொறுப்பாளர் தலைமையில் நடந்தது.
திருக்கோவிலுார் தொகுதி பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் லட்சுமி திருமண மண்டபத்தில் நடந்தது. தொகுதி அமைப்பாளர் கார்த்திகேயன் வரவேற்றார். விழுப்புரம் மாவட்டத் தலைவர் கலிவரதன் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் பாலசுந்தரம், மாநில செயலாளர் வரதராஜன் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினரான தமிழ்நாடு இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, எதிர்வரும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியம், அதற்கான வழிமுறைகள், பணிகள் குறித்து விளக்கிப் பேசினார்.
இளைஞரணி மாவட்ட பொதுச் செயலாளர் திருமால், நிர்வாகிகள் சதீஷ்குமார், பிரபாகரன், பத்ரிநாராயணன், ராஜாஜி, மதன்ராஜ், அலமேலு, புவனேஸ்வரி, வாசு, வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.திருக்கோவிலூர் கிழக்கு ஒன்றிய தலைவர் வெங்கட்ராமன் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE