அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாற்றுக்கட்சியினர் ஆயிரம் பேர் தி.மு.க.,வில் இணைந்தனர்

Added : பிப் 21, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட பகுதியை சேர்ந்த மாற்றுக்கட்சியினர் ஆயிரம் பேர் நேற்று தி.மு.க.,வில் இணைந்தனர். கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க, அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட பொறுப்பாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வநாயகம், நகரச் செயலாளர் சுப்ராயலு, முன்னாள் எம்.எல்.ஏ., மூக்கப்பன்,

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட பகுதியை சேர்ந்த மாற்றுக்கட்சியினர் ஆயிரம் பேர் நேற்று தி.மு.க.,வில் இணைந்தனர்.

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க, அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட பொறுப்பாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வநாயகம், நகரச் செயலாளர் சுப்ராயலு, முன்னாள் எம்.எல்.ஏ., மூக்கப்பன், பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, காமராஜ், லியாகத்அலி, எத்திராஜ், கோவிந்தராஜ், சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியச் செயலாளர் வெங்கடாசலம் வரவேற்றார். நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாற்றுக்கட்சியினர் ஆயிரம் பேர், தி.மு.க.,வில் இணைந்தனர்.

தி.மு.க., நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். மாவட்ட பொறுப்பாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பேசியதாவது; கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதியில் வரும் தேர்தலில் யார் ஜெயிப்பார்கள் என்ற இழுபறி உள்ளதாக கூறி வருகின்றனர். ஆனால் நாங்கள் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க.,வை வெற்றி பெற செய்வேன். இல்லையெனில் எனது மாவட்ட பொறுப்பாளர் பதவியை ராஜினாமா செய்வேன். தி.மு.க., தலைவர் ஸ்டாலின் சொல்லி வருவதை எடப்பாடி செய்து வருகிறார். 10 ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் செய்யாததை தற்போது, விவசாய கடன் உள்ளிட்டவைகளை தள்ளுபடி செய்கிறார்.அ.தி.மு.க.,வினர் பணம் கொடுத்து கூட்டத்தை கூட்டி வருகின்றனர்.

ஆனால் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதிக்கு தானாகவே கூட்டம் சேர்ந்தது. பணம் கொடுத்து கூட்டவில்லை. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனை கண்டித்து இன்று நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் எனக்கூறினார். ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X