கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சியில் கல்லை தமிழ் சங்கம் சார்பில் இலக்கிய தொடர்சொற்பொழிவு நடந்தது.
நிகழ்ச்சிக்கு கல்லை தமிழ் சங்க தலைவர்புகழேந்தி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் நல்லமுத்து, தமிழ் படைப்பாளர்கள் சங்க தலைவர் செம்பியன், தியாகதுருகம் தமிழ் சங்க தலைவர் ராதாகிருஷ்ணன், அரியபெருமானுார் நல்லாப்பிள்ளை, அரசம்பட்டு திருவள்ளுவர் தமிழ் சங்க சிறப்பு தலைவர் செல்வராஜன், சிவப்பிரகாசம் முன்னிலை வகித்தனர்.கவிஞர் முத்தமிழ் முத்தன் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடி நிகழ்ச்சியை துவக்கினார். கல்லை தமிழ் சங்க செயலாளர் சாதிக் பாட்சா வரவேற்றார்.
பொருளாளர் அம்பேத்கர், இணைச் செயலாளர் மகேந்திரன், டாக்டர் ரவிச்சந்திரன், சண்முக பிச்சப்பிள்ளை, கோவிந்தன், மத்திய கலால் மற்றும் சுங்கத்துறை உதவி ஆணையர் சண்முக சுந்தரம், சங்கை தமிழர் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் தொடர் சொற்பொழி வாற்றினர்.காயத்ரி நன்றி கூறினார். செயலாளர் மதிவாணன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE