செஞ்சி : அண்ணமங்கலம் கிராமத்தில் மேல்மைலையனூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் ஜெ., பிறந்த நாளை முன்னிட்டு எலும்பு, மூட்டு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
முன்னாள் முதல்வர் ஜெ.,வின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு மேல்மலையனூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., மற்றும் சென்னை சவுந்தரபாண்டியன் எலும்பு மூட்டு மருத்துவமனை, ஆராய்ச்சி நிலையம் சார்பில் அண்ணமங்கலம் கிராமத்தில் எலும்பு மூட்டு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.மேல்மலையனுார் தெற்கு ஒன்றிய செயலாளர் ஏழுமலை தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய சேர்மன் ராஜாராணி ஏழுமலை, சென்னை மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவர் நந்தினி ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மருத்துவ அணி மாவட்ட இணை செயலாளர் யோகேஸ்வரன் வரவேற்றார். அமைச்சர் சண்முகம் முகாமை துவங்கி வைத்து, பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். மூட்டு மாற்று அறுவை சிகிச்சை ஆலோசகர்கள் டாக்டர் பரத் லோகநாதன், டாக்டர் சரவணன், யோகேஷ்குமார், டாக்டர் சுமேஷ், பிரியன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் மாவட்ட விவசாய அணி செயலாளர் பாலகிருஷ்ணன், ஒன்றிய அவைத்தலைவர் பூங்காவனம், மாவட்ட பிரதிநிதி மணி எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் ராஜேந்திரன், மகளிரணி செயலாளர் உமா மகேஸ்வரி, சிறுபான்மை பிரிவு செயலாளர் மஸ்தான், இளைஞரணி செயலாளர் முரளி, தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் சுகன்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE