தியாகதுருகம் : பீளமேடு கிராமத்தில் பெண் தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.
தியாகதுருகம் ஒன்றியம் பீளமேடு கிராமத்தில் மத்திய தொழிலாளர் கல்வி வாரியம் மற்றும் புதுமலர் அறக்கட்டளை சார்பில் பெண் தொழிலாளர்களுக்கான 2 நாள் பயிற்சி முகாம் நடந்தது.புதுமலர் அறக்கட்டளை நிறுவனர் தனபால் தலைமை தாங்கினார். சமூக ஆர்வலர் மணிகண்டன் முன்னிலை வகித்தார்.மகளிர் சுய உதவிக்குழு ஊக்குனர் முத்துலட்சுமி வரவேற்றார்.மத்திய தொழிலாளர் கல்வி வாரிய அலுவலர் நடராஜன் பயிற்சி அளித்தார். மத்திய, மாநில அரசு செயல்படுத்தும் திட்டங்கள் மற்றும் அதன் மூலம் பெண் தொழிலாளர் களுக்கு கிடைக்கும் பயன்கள் குறித்து விளக்கப்பட்டது.
பீளமேடு, கலையநல்லுார், பல்லகச்சேரி, வடதொரசலுார், சித்தலுார், வேங்கைவாடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.தன்னார்வலர் அம்சா நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE