பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தலில் ஓட்டளிக்க 4 கி.மீ., நடக்கணுமா!

Added : பிப் 21, 2021
Share
Advertisement
அன்னுார்:'ஓட்டுப்போட நான்கு கி.மீ., துாரம் நடக்க வேண்டும்' என பட்டக்காரன்புதுார் மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.அன்னுார் அடுத்த அ.மேட்டுப்பாளையம் ஊராட்சியில், 3,450 வாக்காளர்கள் உள்ளனர். அ.மேட்டுப்பாளையத்தில், மூன்று ஓட்டுச்சாவடிகள், தொப்பம்பட்டியானுாரில் ஒரு ஓட்டுச்சாவடி செயல்படுகிறது. பட்டக்காரன்புதுார் மற்றும் இடையர் பாளையத்தில், 500 வாக்காளர்கள் உள்ளனர்.

அன்னுார்:'ஓட்டுப்போட நான்கு கி.மீ., துாரம் நடக்க வேண்டும்' என பட்டக்காரன்புதுார் மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.அன்னுார் அடுத்த அ.மேட்டுப்பாளையம் ஊராட்சியில், 3,450 வாக்காளர்கள் உள்ளனர். அ.மேட்டுப்பாளையத்தில், மூன்று ஓட்டுச்சாவடிகள், தொப்பம்பட்டியானுாரில் ஒரு ஓட்டுச்சாவடி செயல்படுகிறது. பட்டக்காரன்புதுார் மற்றும் இடையர் பாளையத்தில், 500 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள், நான்கு கி,மீ., தொலைவில் உள்ள அ.மேட்டுப்பாளையம் ஓட்டுச்சாவடியில் ஓட்டு அளிக்கின்றனர்.இதேபோல், கரப்பாளையம் புதுாரில், 150 வாக்காளர்கள், 4 கி.மீ., தொலைவிலுள்ள தொப்பம்பட்டியானுாரில் ஓட்டளிக்கின்றனர். இந்த கிராமங்களுக்கு பஸ் வசதி இல்லை. எனவே, பெரும்பாலானவர்கள் நடந்து சென்று ஓட்டளிக்க வேண்டி உள்ளது. இதற்கு தீர்வாக, பட்டக்காரன்புதுார் தொடக்கப்பள்ளியில் ஓட்டுச்சாவடி மையம் அமைக்க வேண்டும்.இங்கு பட்டக்காரன் புதுார், இடையர்பாளையம், அய்யப்பரெட்டிபுதுார், கரப்பாளையம் புதுார், வாக்காளர்கள் எளிதாக வந்து ஓட்டளிக்க முடியும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, காங்., திருப்பூர் வடக்கு மாவட்ட துணைத்தலைவர் கருப்பசாமி மற்றும் பொது மக்கள், தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சந்திராவிடம் மனு அளித்தனர்.'இந்தக் கோரிக்கைக்காக, கடந்த சட்டசபை தேர்தலின்போதும் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இந்த தேர்தலிலாவது பட்டக்காரன்புதுாரில் ஓட்டுச்சாவடி அமைக்க வேண்டும்' என, மக்கள் கேட்டுக் கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X