பொது செய்தி

இந்தியா

மஹாராஷ்டிரா மாநிலத்தில் மீண்டும் ஊரடங்கு?

Updated : பிப் 23, 2021 | Added : பிப் 21, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
மும்பை:மஹாராஷ்டிராவில், கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ளதை அடுத்து, மாநிலம் முழுதும் மாலை, 5:00 மணி முதல், மறுநாள் காலை, 5:00 மணி வரை, 12 மணி நேர ஊரடங்கு பிறப்பிக்கவும், விதிமுறைகளை மீறுபவர்களுக்கு, 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிப்பது குறித்தும், மாநில அரசு ஆலோசித்து வருகிறது.மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத
மஹாராஷ்டிரா, ஊரடங்கு, கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்19

மும்பை:மஹாராஷ்டிராவில், கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ளதை அடுத்து, மாநிலம் முழுதும் மாலை, 5:00 மணி முதல், மறுநாள் காலை, 5:00 மணி வரை, 12 மணி நேர ஊரடங்கு பிறப்பிக்கவும், விதிமுறைகளை மீறுபவர்களுக்கு, 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிப்பது குறித்தும், மாநில அரசு ஆலோசித்து வருகிறது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், கடந்த சில தினங்களாக, கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. நேற்று முன்தினம், 6,000க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து, கொரோனா தடுப்பு விதிமுறைகளை, மாநில அரசு கடுமையாக்கி உள்ளது.

இது குறித்து, மாநில நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத் துறை அமைச்சர் விஜய் வாடேடிவார் கூறியதாவது: மஹாராஷ்டிராவின் விதர்பா பகுதியில், தொற்று எண்ணிக்கை உயர்ந்துள்ளது. நாக்பூரில், 19ம் தேதி, 750க்கும் அதிகமானோருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அமராவதி, வர்தா மற்றும் யவத்மால் மாவட்டங்களில், ஏற்கனவே பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

தொற்று பரவலின் தீவிரத்தை பொறுத்து, ஊரடங்கு மற்றும் இதர கட்டுப்பாடுகள் குறித்து சுயமாக முடிவெடுத்துக் கொள்ள, மாவட்ட நிர்வாகங்கள், கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட உள்ளது. காய்கறி சந்தைகளை, காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை திறப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். மக்களுக்கு, கொரோனா குறித்த அச்சம் போய்விட்டது.

பெரும்பாலானவர்கள் முக கவசம் அணிவதில்லை; தனி மனித இடைவெளியை பின்பற்றுவது இல்லை.இதனால், தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. நிலைமை இப்படியே நீடித்தால், கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.மஹாராஷ்டிரா முழுதும், மாலை, 5:00 மணி முதல், மறுநாள் காலை, 5:00 மணி வரையில், 12 மணி நேர ஊரடங்கு பிறப்பிக்கவும், விதிமுறைகளை மீறும் திருமண மண்டபங்களுக்கு, 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் ஆலோசித்து வருகிறோம்.

இது குறித்து, முதல்வர் உத்தவ் தாக்கரேவுடன் ஆலோசனை நடத்தி, ஒரு வாரத்தில் முடிவெடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே, அமராவதி மாவட்டத்தில், கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, இன்று முதல், ஒரு வாரத்துக்கு ஊரடங்கை அமல்படுத்துவதாக, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேபோல், நாக்பூரில் இரவு, 11:00 முதல், காலை, 6:00 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும், 28ம் தேதி வரை, பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


கடும் அபராதம்!



மஹாராஷ்டிராவின் மும்பை நகரில், கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி, மேயர் கிஷோரி பெட்னேகர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள பல்வேறு உயர் ரக ஓட்டல்கள், கிளப் மற்றும் மது விடுதிகளில், மாநகராட்சி அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது, 100க்கும் மேற்பட்டவர்கள் முக கவசம் அணியாமல், தனி மனித இடைவெளி பின்பற்றாமல் இருந்தனர். இதையடுத்து, இரண்டு மதுபான விடுதிகளுக்கு தலா, 30 ஆயிரம் ரூபாய் அபராதமும்; மற்றொரு விடுதிக்கு, 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டன.


கொரோனா விட்டுவிடாது



பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதை, ஒருவர் கூட விரும்பவில்லை. அதற்காக நம்மை, கொரோனா விட்டுவிடாது. அதனால், சில கட்டுப் பாடுகளை விதிக்க வேண்டியுள்ளது. முக கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு, அபராதம் விதிக்கப்படுகிறது.

உத்தவ் தாக்கரே

மஹாராஷ்டிரா முதல்வர், சிவசேனா.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ram - mayiladuthurai,இந்தியா
22-பிப்-202116:39:26 IST Report Abuse
ram மத்திய அரசு சொல்லுவதை கேட்பது இல்லை, விடிஞ்சா மோடி ஒழிக மோடி ஒழிக என்று புலம்புவது
Rate this:
Cancel
22-பிப்-202114:43:17 IST Report Abuse
ஆப்பு மகாராஷ்டிராவில் கொரோனா அதிகமாச்சுன்னா மகாராஷ்டிரா தான் காரணம். அங்கே நல்லா கன்றோல் ஆச்சுன்னா மோடிதான் காரணம். விருதுக்கு ஒருத்தர், திட்டுக்கு இன்னொருத்தர்.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
22-பிப்-202107:16:11 IST Report Abuse
blocked user மாதிரி மாநிலம் என்றெல்லாம் கதை விட்டார்கள்... காங்கிரஸ் குப்பைகளால் எதைத்தான் உருப்படியாக செய்ய முடியும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X