விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அரிசி ஆலையில் புகுந்த நல்லபாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து ஏரியில் விட்டனர்.
விக்கிரவாண்டி அழகப்பா நகரில் முன்னாள் சேர்மன் அப்துல் சலாமிற்கு சொந்தமான அரிசி ஆலை இயங்கி வருகிறது.நேற்று காலை 9:00 மணியளவில் ஆலை வளாகத்தில் சுமார் 4 அடி நீளமுள்ள நல்லபாம்பு புகுந்தது. அதனைக் கண்ட தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். தகவலறிந்த விக்கிரவாண்டி தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெய்சங்கர் தலைமையில் பேரிடர் மீட்பு குழுவினர் 2 மணி நேரம் போராடி பாம்பை பிடித்து, விக்கிரவாண்டி ஏரியில் அடர்ந்த பகுதியில் விட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE