மேட்டுப்பாளையம்:குருந்தமலை செல்லும் பாதையில் உள்ள பாலத்தில், தடுப்பு சுவர் இல்லாததால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.மேட்டுப்பாளையம் நகராட்சி எல்லையில் குரும்பனுார் பள்ளம் உள்ளது. மழைக்காலங்களில் இந்த பள்ளத்தின் வழியாக வெள்ளநீர் வருகிறது. அதனால் பள்ளத்தில் பாலமும், மேல் பகுதியில் தடுப்பு சுவரும் அமைக்கப்பட்டன.இந்நிலையில், தொண்டாமுத்துாருக்கு குடிநீர் குழாய் கொண்டு செல்வதற்காக, பள்ளத்தின் நடுவே கான்கிரீட் துாண் அமைத்து, அதன்மீது குழாய் அமைத்தனர்.கடந்தாண்டு கனமழை காலத்தில் வெள்ளநீரின் வேகத்தில் குடிநீர் குழாய், கான்கிரீட் துாண், பாலத்தின் மீது போட்டிருந்த தடுப்புச்சுவர் ஆகியவை அடித்துச் செல்லப்பட்டன. இதனால் கடந்த ஓராண்டாக குரும்பனுார் பள்ளம் பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லை. குருந்தமலை, தேக்கம்பட்டி, மருதுார் கிராம விவசாயிகள், காய்கறிகளை இரு சக்கர வாகனங்களில், மேட்டுப்பாளையம் காய்கறி மார்க்கெட்டுக்கும், உழவர் சந்தைக்கும் இரவில் கொண்டு வருகின்றனர். அதேபோல மேட்டுப்பாளையம் நகரில் வேலை முடிந்து இரவு, 10 மணிக்கு மேல், இருசக்கர வாகனங்களில் பலர் வீடு திரும்புகின்றனர். இவ்வாறு வருபவர்கள், பாலத்தின் மீது எவ்வித தடுப்பு சுவர் இல்லாததால், கட்டுப்பாட்டை இழந்து, பள்ளத்தில் விழுந்து காயம் அடைகின்றனர். வாகனங்களில் செல்பவர்களை பாதுகாக்கும் வகையில், பாலத்தின் இரு பக்கமும், தடுப்பு சுவர் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE