அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., கொடி கம்பங்கள் அகற்ற தி.மு.க.,வினர் புகார்

Added : பிப் 21, 2021
Share
Advertisement
விழுப்புரம் : அ.தி.மு.க., கொடி கம்பங்களை அகற்றக்கோரி, டி.ஐ.ஜி., மற்றும் எஸ்.பி., அலுவலகத்தில் தி.மு.க.,வினர் புகார் தெரிவித்தனர். தி.மு.க., துணை பொதுச்செயலாளர் பொன்முடி தலைமையில், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., பாண்டியன் மற்றும் எஸ்.பி., ராதாகிருஷ்ணன் ஆகியோரை அக்கட்சியினர் தனித்தனியே சந்தித்தனர்.அப்போது, பொன்முடி கூறுகையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து விழுப்புரம்

விழுப்புரம் : அ.தி.மு.க., கொடி கம்பங்களை அகற்றக்கோரி, டி.ஐ.ஜி., மற்றும் எஸ்.பி., அலுவலகத்தில் தி.மு.க.,வினர் புகார் தெரிவித்தனர்.

தி.மு.க., துணை பொதுச்செயலாளர் பொன்முடி தலைமையில், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., பாண்டியன் மற்றும் எஸ்.பி., ராதாகிருஷ்ணன் ஆகியோரை அக்கட்சியினர் தனித்தனியே சந்தித்தனர்.அப்போது, பொன்முடி கூறுகையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் நாளை (இன்று) தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.அந்த இடங்களில் முதல்வரை வரவேற்று, அ.தி.மு.க., கொடி கம்பங்கள் நடப்பட்டுள்ளது. மேலும், கலைஞர் அறிவாலயம் எதிரிலும், கொடி கம்பங்கள் நட்டுள்ளனர். இதனால், ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் மற்றும் அறிவாலயம் எதிரில் உள்ள அ.தி.மு.க., கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் என்றார்.அப்போது, மாவட்ட செயலாளர் புகழேந்தி, மாவட்ட அவைத்தலைவர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X