சின்னசேலம் : சின்னசேலத்தில் கூடுதல் ஓட்டுச் சாவடிகள் அமைப்பது குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
சங்கராபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சின்னசேலம் நகரப்பகுதியில் 18 வார்டுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தேர்தலின் போது பொதுமக்களுக்கு வாக்களிக்க வசதியாக நகரப்பகுதியில் மூன்று இடங்களில் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளது.இந்நிலையில், சின்னசேலம் வடக்கு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 290 மற்றும் 299 ஆகிய இரண்டு ஓட்டுச் சாவடிகள் உள்ளன. இதில் 290 வது ஓட்டுச்சாவடியில் 1191 வாக்காளர்கள் உள்ளதால், அதனை இரண்டாக பிரித்து 290 ஏ என்ற புதிய ஓட்டுச்சாவடி உருவாக்கப்பட்டுள்ளது.
இதனால் புதிய ஓட்டுச்சாவடி அமைக்க போதிய இடவசதி தொடக்கப்பள்ளியில் இல்லாததால், அதனை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டடத்திற்கு மாற்றுவதற்கான ஆய்வு பணிகளை கலெக்டர் கிரண்குராலா நேற்று மேற்கொண்டார்.அப்போது பொதுமக்கள் வரிசையில் நின்று ஓட்டுப் போட போதிய இட வசதி இருந்ததால், புதிய ஓட்டுச்சாவடியை அரசு ஆண்கள் பள்ளியில் அமைக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.ஆய்வின் போது, தாசில்தார் வளர்மதி, பி.டி.ஓ., சுமதி, வருவாய் ஆய்வாளர் சிங்காரவேல், வி.ஏ.ஓ.,க்கள் கண்ணதாசன், காந்திமதி உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE