அரசியல் செய்தி

தமிழ்நாடு

மனு கொடுத்த பெண்களுக்கு கிடைத்தது நிதியுதவி

Added : பிப் 21, 2021
Share
Advertisement
* காரமடை வந்திருந்த தி.மு.க., தலைவர் ஸ்டாலினிடம், கண்ணார்பாளையத்தை சேர்ந்த சங்கீதா மனு கொடுத்தார். 'தனக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர், கணவர் பிரிந்து சென்றுவிட்டார், ஆதரவு யாரும் இல்லை, ஏதாவது உதவி செய்யுங்கள்' என்று கோரினார். பதில் அளித்த ஸ்டாலின், 'தி.மு.க.,வினர் உங்களுக்கு, உதவி செய்வர்' என அப்போது கூறினார்.நேற்று தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன்,

* காரமடை வந்திருந்த தி.மு.க., தலைவர் ஸ்டாலினிடம், கண்ணார்பாளையத்தை சேர்ந்த சங்கீதா மனு கொடுத்தார். 'தனக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர், கணவர் பிரிந்து சென்றுவிட்டார், ஆதரவு யாரும் இல்லை, ஏதாவது உதவி செய்யுங்கள்' என்று கோரினார். பதில் அளித்த ஸ்டாலின், 'தி.மு.க.,வினர் உங்களுக்கு, உதவி செய்வர்' என அப்போது கூறினார்.நேற்று தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், காரமடை மேற்கு ஒன்றிய செயலாளர் சுரேந்திரன், கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் தலா, 25 ஆயிரம் ரூபாய் வீதம், ஒரு லட்சம் ரூபாயை சங்கீதாவிடம் வழங்கினர்.* சூலுார் வட்டாரம் அரசூரை சேர்ந்த ஷாலினி, தனது கணவர் விபத்தில் காயமடைந்ததால், வருமானமின்றி தவிப்பதாகவும், நிதி உதவி கேட்டு மனு அளித்தார். கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், ஷாலினி குடும்பத்துக்கு, ரூ. 2 லட்சம் வழங்கப்பட்டது.கண்பார்வை குறைபாடு உடைய பச்சார்பாளையம் மைதிலி, தர்ஷினி குடும்பத்துக்கு ஒரு லட்சம், வாகராயம்பாளைத்தை சேர்ந்த உடல்நலம் பாதிக்கப்பட்ட மணிக்கு 50 ஆயிரம் ரூபாய், நீலம்பூரை சேர்ந்த சந்தியாவுக்கு கல்வி உதவித்தொகை, 15 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது.மாவட்ட பொறுப்பாளர் சேனாதிபதி, ஒன்றிய பொறுப்பாளர்கள் மகாலிங்கம், ராஜேந்திரன், முத்துலிங்கம், அன்பரசு உள்ளிட்டோர், மனு அளித்தவர்களுக்கு நிதியுதவி வழங்கினர்
-நமது நிருபர் குழு-.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X