அன்னுார்:தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.பள்ளிக் கல்வித் துறை சார்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் தேர்வு நடக்கிறது.இதில் தேர்ச்சி பெறுவோருக்கு, ஒன்பதாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை, ஆண்டுக்கு, 12 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அன்னுார் வட்டாரத்தில் இரு மையங்களில் நேற்று தேர்வு நடந்தது.அன்னுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் விண்ணப்பித்த, 95 மாணவர்களில், 86 பேர் தேர்வு எழுதினர். அரசு உதவி பெறும் கே.ஜி., பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விண்ணப்பித்த, 76 பேரில், 72 பேர் தேர்வு எழுதினர்.தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் கூறுகையில், 'தேர்வு மூன்று மணி நேரம் நடந்தது. இதில் மனத்திறன் தேர்வு, படிப்பறிவு திறன் தேர்வு என இரு பிரிவுகளாக இருந்தது. படிப்பறிவு திறன் தேர்வில் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியலில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. சமூக அறிவியல் மற்றும் அறிவியலில் வினாக்கள் மிகவும் கடினமாக இருந்தது' என, வருத்தத்துடன் தெரிவித்தனர்,மனத் திறன் தேர்வு ஈசிபூஜானா, நடுநிலைப்பள்ளி, பொகலுார்.மனத்திறன் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் எளிமையாக இருந்தன. அதில் அதிக மதிப்பெண் பெற முடியும்.மிகவும் கடினம்தினேஷ்குமார், நடுநிலைப் பள்ளி, கணுவக்கரை.படிப்பறிவுத்திறன் தேர்வில், சமூக அறிவியல் பிரிவில் கேள்விகள் கடினமாக இருந்தன. எளிதில் பதிலளிக்க முடியாதபடி இருந்தன.அறிவியல் பாடம் கடினம்கதிரேசன், நடுநிலைப்பள்ளி, கணுவக்கரை.தேர்வு சற்று கடினமாக இருந்தது. அறிவியல் பாடத்தில் பல கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை. பெற்றோர் கூறுகையில், 'எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடத்தவில்லை. மாணவர்கள் இதில் தேர்ச்சிக்கான மதிப்பெண் பெறுவது கஷ்டம். எனவே, அரசு சலுகை மதிப்பெண் அளிக்க வேண்டும். தேர்ச்சிக்கான மதிப்பெண்ணை குறைக்க வேண்டும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE