பொது செய்தி

தமிழ்நாடு

திருக்கோவிலுார் தென்பெண்ணை ஆற்றில் சன்னியாசி சங்கத்தினர் ஆரத்தி வழிபாடு

Added : பிப் 21, 2021
Share
Advertisement
திருக்கோவிலுார் : அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் சார்பில் தென்பெண்ணை நதி பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசார பாதயாத்திரை குழுவினர் திருக்கோவிலுார் தென்பெண்ணை ஆற்றில் ஆரத்தி வழிபாடு நடத்தினர். நதியை நம் முன்னோர்கள் புனிதமாகவும், தாயாகவும், பண்பாட்டின் அடையாளமாகவும் கருதி பாதுகாத்து வந்தனர்.நாகரீக உலகில் கழிவுகளை வெளியேற்றும் இடமாகவும், குப்பைகளை கொட்டும்

திருக்கோவிலுார் : அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் சார்பில் தென்பெண்ணை நதி பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசார பாதயாத்திரை குழுவினர் திருக்கோவிலுார் தென்பெண்ணை ஆற்றில் ஆரத்தி வழிபாடு நடத்தினர்.

நதியை நம் முன்னோர்கள் புனிதமாகவும், தாயாகவும், பண்பாட்டின் அடையாளமாகவும் கருதி பாதுகாத்து வந்தனர்.நாகரீக உலகில் கழிவுகளை வெளியேற்றும் இடமாகவும், குப்பைகளை கொட்டும் மையமாகவும், மணல் மாபியாக்களின் கூடாரமாக மாறி வருகிறது.இதன் காரணமாக நதி மாசுபட்டு, நிலத்தடி நீர் குறைந்து, சுற்றுச்சூழல் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. நதியை மாசுபடுத்துவதன் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திடும் வகையில், அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் தென்பெண்ணை நதி பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசார பாதயாத்திரையை கடந்த 31ம் தேதி தென்பெண்ணை உருவாகும் கர்நாடக மாநிலம், நந்தி மலையில் துவங்கியது. இக்குழுவினர் வரும் 25ம் தேதி கடலூரில் தென்பெண்ணை சங்கமிக்கும்
கடலை சென்றடைகின்றனர்.நேற்று முன்தினம் திருக்கோவிலுார் வந்த இக்குழுவினருக்கு திருக்கோவிலுார் மற்றும் அரகண்டநல்லுார் பகுதியை சேர்ந்த பக்தர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.பாதயாத்திரை தலைவர் மேலமங்கலம் ஸ்ரீலஸ்ரீ குமாரசாமி தம்பிரான் சுவாமிகள், ஒருங்கிணைப்பாளர் சுவாமி காளீஸ்வரானந்த சரஸ்வதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.தென்பெண்ணை ஆற்றில் மாலை 6:30 மணி அளவில் நதிக்கு சிறப்பு பூஜைகள் செய்து ஆரத்தி வழிபாடு நடத்தினர்.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X