சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் பா.ஜ.,; நிர்வாகிகள் கூட்டத்தில் மோடி பங்கேற்பு

Updated : பிப் 23, 2021 | Added : பிப் 21, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: தமிழகம் உட்பட, ஐந்து மாநில சட்டசபைகளுக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், பா.ஜ.,வின் புதிய தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். மாநிலத் தலைவர்கள், தேசிய பொறுப்பாளர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், சட்டசபை தேர்தலுக்கு தயாராவது குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி
election, BJP, PM Modi

புதுடில்லி: தமிழகம் உட்பட, ஐந்து மாநில சட்டசபைகளுக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், பா.ஜ.,வின் புதிய தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

மாநிலத் தலைவர்கள், தேசிய பொறுப்பாளர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், சட்டசபை தேர்தலுக்கு தயாராவது குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி சட்டசபைகளுக்கு வரும், ஏப்., - மே மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. ஏற்கனவே, தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கத்துக்கு, பிரதமர், நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டார். வரும், இரண்டு வாரங்களில் இந்த மாநிலங்களுக்கு மீண்டும் பயணம் செய்ய உள்ளார். பல்வேறு திட்டப் பணிகளை துவக்கி வைக்க உள்ளார்.

இந்நிலையில், பா.ஜ.,வின் புதிய தேசிய நிர்வாகிகள் கூட்டம், கட்சித் தலைவர், ஜே.பி. நட்டா தலைமையில், டில்லியில் நடந்தது. இதில், மாநிலத் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, நிர்வாகிகள் இடையே உரையாற்றினார். இதில், ஐந்து சட்டசபைகளுக்கான தேர்தல் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

அசாமில் இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க, பா.ஜ., தீவிரமாக உள்ளது. மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரசுக்கு, பலத்த போட்டியை அளித்து வருகிறது. அங்கு ஆட்சி அமைப்பதற்கான வியூகங்களை, கட்சியின் மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான, அமித் ஷா வகுத்து வருகிறார்.

கேரளாவில் கால் பதிக்கும் முயற்சியிலும், பா.ஜ., ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்துள்ளது. அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் முயற்சியில் பா.ஜ., உள்ளது. அத்துடன், யூனியன் பிரதேசமான, புதுச்சேரியில் ஆட்சி அமைக்க தீவிரமாக முயற்சித்து வருகிறது.

இந்நிலையில், கட்சி நிர்வாகிகள் இடையே நடந்த இந்தக் கூட்டம், முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.விவசாய சட்டத்துக்கு பாராட்டுமத்திய அரசின் விவசாய சட்டங்களை எதிர்த்து, டில்லி எல்லையில், போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், பா.ஜ., தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில், விவசாய சட்டங்களை கொண்டு வந்த தற்காக, பிரதமர், நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கொரோனா வைரஸ் பிரச்னை, சீனாவுடனான எல்லைப் பிரச்னையை சிறப்பாக கையாண்ட தற்காக பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
22-பிப்-202118:07:34 IST Report Abuse
Easwar Kamal மோடிஜி உங்களுக்கு தமிழக தேர்தல் தன முக்கியமா? இதை விட பல முக்கியமான வேலைகள் உள்ளது மறந்து விடாதீர்கள். இன்னமும் கொரோனவினால் இந்தியா மீண்ட படு இல்லை. சீனா ப்ரிச்சனை முடிந்த படு இல்லை. இனமும் பல ப்ரிச்சனை உள்ளது. உள்ள பெயரை கெடுத்து கொள்ளதீர்கள்.
Rate this:
Cancel
Arachi - Chennai,இந்தியா
22-பிப்-202109:22:30 IST Report Abuse
Arachi தேசிய காட்சிகள் மாநிலத்தை ஆளுவது எல்லாகோணத்திலும் ஆபத்தானது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X