பொது செய்தி

தமிழ்நாடு

கறிவேப்பிலை விலை வரலாறு காணாத உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

Added : பிப் 21, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:கறிவேப்பிலை விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில், வாழைக்கு அடுத்தபடியாக, கறிவேப்பிலை பிரதான விவசாயமாகும். ஒவ்வொரு விவசாயியும் தனது விளைநிலத்தில், குறைந்தது ஒரு ஏக்கரில் செங்காம்பு கறிவேப்பிலை பயிர் செய்துள்ளனர். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இலை அறுவடை செய்யப்படுகிறது.

இப்பகுதியில் விளையும் கறிவேப்பிலையை கேரளா, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.இரண்டு மாதம் முன் ஒரு கிலோ கறிவேப்பிலை, 50 ஐம்பது ரூபாய்க்கு விற்பனை ஆனது. தற்போது ஒரு கிலோ அதிகபட்சமாக, 85 ரூபாய்க்கு விவசாயிகள் தோட்டத்திலேயே விலை கொடுத்து, வியாபாரிகள் அறுவடை செய்கின்றனர். இந்த விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேரம்பாளையம் கறிவேப்பிலை வியாபாரி ராஜேந்திரன் கூறியதாவது:காரமடை, சிறுமுகை பகுதியில் ஆயிரம் ஏக்கருக்கு மேல், கறிவேப்பிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. காரமடையில் இருந்து தினமும் கேரளாவுக்கு மட்டும், 35 டன் அனுப்பி வைக்கப்படுகிறது. அது மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கிறோம். கொரோனா காலத்தில் ஒரு கிலோ கறிவேப்பிலை அதிகபட்சமாக, 15 ரூபாய்க்கு தோட்டத்தில் அறுவடை செய்யப்பட்டது.இரண்டு மாதம் முன் மண்டபங்களில் திருமணங்கள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க துவங்கியதை அடுத்து, விலை உயர்ந்து, ஒரு கிலோ, 50 ரூபாய்க்கு அறுவடை செய்யப்பட்டது.
சமீபத்திய மழையால் கறிவேப்பிலையில், கரும்புள்ளி நோய் ஏற்பட்டு, மகசூல் பாதிக்கப்பட்டது.தற்போது சுபகாரியங்கள் அதிக எண்ணிக்கையில் நடக்க தொடங்கியுள்ளதால், கிலோ கறிவேப்பிலை, 85 ரூபாய்க்கு தோட்டத்தில் அறுவடை செய்யப்படுகிறது. சில்லறை விலையில், ஒரு கிலோ கறிவேப்பிலை, 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்கின்றனர். ஆந்திராவில் இருந்தும் கறிவேப்பிலை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாதம் முழுவதும் இதே விலை உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.

Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X